கொசு ஒழிப்பு பணிகள்- கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு…

கோவை: கோவையில் நடைபெற்று வரும் கொசு ஒழிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 92க்கு உட்பட்ட இடையர்பாளையம் பிரிவு ஆர்.கே.வி பள்ளி அருகிலுள்ள பழமுதிர் நிலையம் வீதியில் மழைக்காலங்களில் செங்குளம் நிரம்பி கசிவு நீர் வெளியேறும் பகுதிகளில் மழை நீர் வடிகால் கட்டுவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

மேலும், வார்டு எண்.92க்கு உட்பட்ட சுகுணாபுரம் கிழக்கு மலைப்பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவது தொடர்பாகவும், கட்டிட பராமரிப்பு பணி நடைபெறுவது தொடர்பாகவும் பாலு கார்டன் பகுதியில் மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கத்தினை இளைஞர் பயன்படுத்துவது குறித்தும்கிருஷ்ணசாமி நகர் பகுதியில் மாநகராட்சி மூலம் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தினை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் அங்கு கூடுதலாக சமையல் கூடம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, வார்டு எண் 83க்கு உட்பட்ட அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில் மழை காலங்களில் செங்குளம் நிரம்பி அப்பகுதியில் கசிவு நீர் வெளியேறி வருவதால் அதனை தடுக்க புதிதாக மழை நீர் வடிகால் அமைக்க மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், ஜேஜே நகர் அருகில் அமைந்துள்ள வாய்க்காலை தூர்வாருதல் தொடர்பாகவும்கிழக்கு மண்டலம் வார்டு எண்.6க்கு உட்பட்ட மாஹாராஜா விஸ்தரிப்பு பகுதியான நேரு நகர் பகுதியில் நடைபெற்றுவந்த டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தொடர்பாகவும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டு, நல்ல தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் எனவும், பொதுமக்கள் சுற்றுப்புறத்தை ஏற்படுத்தினார்.

அதன் பின்பு, வடக்கு மண்டலம் வார்டு எண்.13க்கு உட்பட்ட விஜயா நகர் பகுதியில் மழைநீர் வடிகால் நீர் உந்து மின் மோட்டார் இயங்கும் பகுதியினை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர், அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அங்கு நடைபெற்றுவரும் தார்சாலைப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கொண்டையை மறைக்காத அண்ணாமலை- கோவையில் மாணிக்கம் தாகூர் தாக்கு!

கோவை: கொண்டையை மறைக்காமல் அமெரிக்காவில் இருந்து ஒருவர் வருகிறார் என அண்ணாமலையை மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார். கோவை, சவுரிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க அரசை கண்டித்தும், நீட் தேர்வு பாதிப்புகளை விளக்கியும்...

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...