கோவையில் கட்டணமில்லா டயாலிசிஸ் சிகிச்சை- மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு…

கோவை: கோவையில் கட்டணமில்லா டயாலிசிஸ் சிகிச்சை பெற மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் சீத்தாலட்சுமி அரசு நகர்புற ஆரம்ப சுகாதாநிலைய வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட பொது மக்களுக்கு கட்டணமில்லாமல் டயாலிசிஸ் மேற்கொள்ள 10 எண்ணிக்கையிலான டயாலிசிஸ் இயந்திரங்கள் கொண்ட புதிய டயாலிசிஸ் மையம் கடந்த ஜனவரி மாதம் முதல் இயங்கி வருகிறது.

Advertisement

அனுபவம் வாய்ந்த மருத்துவக்குழுவினரால் டயாலிசிஸ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் இரு வேலையில் 20 நோயாளிகள் இம்மையத்தின் மூலமாக பயனடைந்து வருகின்றனர். பாதுகாப்பு மற்றும் சுகாதார சூழலில் இயங்கி வரும் இம்மையத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த சேவையானது முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் கட்டணமில்லாமல் டயாலிசிஸ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இம்மையம் செயல்படுகிறது.

எனவே, பொது மக்கள் இம்மையத்தினை 9498599703, 9159557631 என்ற எண்களில் தொடர்புகொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, கேட்டுக்கொண்டுள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...