கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வுக்கூட்டம்…

கோவை: கோவையில் நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை வளர்ச்சி திட்டம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார்.

Advertisement

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்.

கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காகவும் ஆலோசனை நடத்துவதற்காகவும் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று காலை வருகை புரிந்தார். காலை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை சார்ந்து ஆய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் துறையின் செயலாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கோவை மாவட்ட அமைச்சர்களான சம்பத்குமார் மற்றும் விக்னேஷ் இருவரும் பங்கேற்கவில்லை.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...