அமைச்சர் வன்னியரசுவின் செயல் விஜய் அரசுக்கு தீங்கு விளைவிக்கும்- கிருஷ்ணசாமி கருத்து…

கோவை: அமைச்சர் வன்னியரசுவின் செயல் விஜய் அரசிற்கு தீங்கு விளைவிக்கும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்க பரிசீலிக்கப்படும் என கூறியதற்கு அமைச்சர் வன்னியரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அரசு மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்குவது குறித்து அமைச்சர் வன்னியரசு தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.


தமிழ்நாட்டில் அரசு நடத்தும் பள்ளி, கல்லூரி மற்றும் மாணவர் விடுதிகளில் இதுவரை முட்டை, கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வரும் நிலையில், மாட்டுக்கறி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருப்பது பலரது உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக அவர் கூறினார்.

Advertisement


அமைச்சர் ஒருவர் தெரிவிக்கும் கருத்து அரசின் கருத்தாக பார்க்கப்படும் என்பதால், வன்னியரசு தனது கருத்தை திரும்பப் பெற்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மாணவர் விடுதிகளில் உணவு தரம் குறித்த புகார்கள் இருக்கும் நிலையில், மாட்டுக்கறி வழங்குவது தொடர்பான முடிவு குறித்து அரசு கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.


இந்த விவகாரத்தை கண்டித்து, வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி காலை 11.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார்.

Advertisement


மேலும், அமைச்சர் வன்னியரசுவின் இல்லம் முன்பாகவும் போராட்டம்h நடத்தப்படும் என்றும், அவர் தனது கருத்தை திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் க.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

அமைச்சர் வன்னியரசின் கருத்து விஜயின் அரசுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் வன்னியரசு போன்றவர்களை முன்கூட்டியே அடக்கி வைக்க வேண்டும் எனவும் கடுமையாக விமர்சித்தார். அரசு விடுதிகளில் ஏற்கனவே உணவு முறையாக வேக வில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் மாட்டுக்கறி போன்று எளிதில் வேகாத இறைச்சியை எவ்வாறு கொடுப்பது என்றும் கேள்வி எழுப்பினார். மாட்டுக்கறி கொடுப்பது என்பது மதம் மாற்றும் செயல் என்பதுதான் இதன் உள் அர்த்தம் எனவும் சுட்டிக்காட்டினார்.

நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் பதவியை முன்கூட்டியே ராஜினாமா செய்ததன் காரணமாக நடைபெறும் இந்த இடைத்தேர்தல் தேவையற்றது என்றும், இதுபோன்ற அரசியல் கட்சி மாறுதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என ஆளுநரிடம் ஏற்கனவே மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.


புதிய தமிழகம் உள்ளிட்ட சுமார் 15 அரசியல் கட்சிகள் இணைந்து செயல்படும் அனைத்து கட்சி கூட்டமைப்பு, இந்த இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகிக்கும் என க.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களில் கூட்டணி அமைப்பது அல்லது தனித்துப் போட்டியிடுவது குறித்து அந்தந்த நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.


உணவு என்பது தனிநபரின் விருப்பம் என்றும், அதில் யாரும் தலையிட முடியாது என அமைச்சர் வன்னியரசு கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் க.கிருஷ்ணசாமி பதிலளித்தார்.
மக்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் உண்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்பதே தனது கருத்து என்றும் அவர் தெரிவித்தார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

என்னடா கொஞ்சமா தண்ணி கொடுக்குற!” – வாலிபரை கத்தியால் குத்திய சகோதரர்கள் கைது

குறைவாக தண்ணீர் கொடுத்ததாக கூறி வாலிபரை கத்தியால் குத்திய சகோதரர்கள் கோவையில் கைது.

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...