சென்னை: நீங்கள் காதல் வயப்பட்டு விட்டால் அவரிடம் சரணடைந்து விடுங்கள் என்று நடிகை மிருணாள் தாக்கூர் உருக்கமாக தெரிவித்துள்ளார்
மிருணாள் தாக்கூர் மற்றும் துல்கர் சல்மான் நடிப்பில் சீதாராமம் திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானது. ரொமான்டிக் ஹிட் அடித்த இந்த படத்தைத் தொடர்ந்து, இந்த ஜோடியும் நாடு முழுவதும் பிரபலமானது.

இதனிடையே ஏ.ஆர்.ரகுமானின் இசையில், அவரது மகன் ஏ.ஆர்.அமீன் பாடிய Bheegi… Bheegi… ஆல்பம் வெளியாகியுள்ளது. இதில் துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் நடித்துள்ளனர்.
இதுவும் காதலை மையப்படுத்தியே அமைந்துள்ளது. விண்டேஜ் ஸ்டைலில் இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
அந்த பாடலை இங்கு காணலாம்
இந்தப் பாடலுக்கான பிரமோஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அத்தகைய பிரமோஷன் பேட்டி ஒன்றில் மிருணாள் தாக்கூர் காதலைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது:-
என்னைப் பொறுத்தவரை காதல் என்பது மிக அழகான ஒரு உணர்வு. அது உங்களை மேம்பட்ட நபராக மாற்றும். ஒவ்வொருவருக்கும் அப்படிப்பட்ட காதல் அமைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இந்த பூமியில் அனைவருக்கும் ஏற்பட வேண்டிய ஒன்றுதான் காதல். காதலின் வரையறைகள் காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டே வருகின்றன. ஆனால் காதல் மாறுவதே கிடையாது.
சரணடைந்துவிடுங்கள்
சில நேரங்களில் காதலில் சிலவற்றை ஏற்றுக் கொள்வதும், அங்கீகரிப்பதும் சிரமமாக இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் நான் ஒன்றை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்

நீங்கள் காதலில் இருப்பவராக இருந்தால் கொடுப்பவராக இருங்கள். இதற்கு ஆண் பெண் என்ற பேதம் இல்லை. அவர்களிடம் முழுமையாக சரணடைந்து விடுங்கள்.
Mrunal Thakur
இவ்வாறு காதலைப் பற்றி மிருணாள் தாக்கூர் உருக்கமாக பேசியுள்ளார்.

