எனக்கு நயன்தரா வேணும்.. CM கொடுப்பாரா? அதிமுக மூத்த தலைவர் சர்ச்சை!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் அரசியல் கூட்டத்தில் நயன்தாராவை இழுத்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில், அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த தலைவர் சி.வி. சண்முகம் கூறிய கருத்து, எதிர்பாராத வகையில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறிய “கனவு காணுங்கள்” என்ற பிரபல வாசகத்தை எடுத்துக்காட்டாக முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து, “மக்களின் கனவுகளை நிறைவேற்றுவோம்” என அரசியல் வாக்குறுதிகள் வழங்கப்படுவது குறித்து சாடும் விதமாக பேச்சை நகர்த்தினார்.

Advertisement

ஆனால் அடுத்த கட்டத்தில் அவர் கூறிய ஒரு வரி தான் முழு விவாதத்தையும் மாற்றியது. “நான் என் கனவை சொன்னால், அதை முதல்வர் நிறைவேற்றுவாரா? எனக்கு நயன்தாரா வேண்டும் என்றால் அதை செய்து தருவார்களா?” என்று கேள்வி எழுப்பியதோடு, “நயன்தாராவை திருமணம் செய்து வை என கேட்டால் அதை ஏற்பாடு செய்வார்களா?” என்ற விதமான குறிப்பும் வெளியானது.

CV Shanmuham

இந்த கருத்து உடனடியாக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கடும் எதிர்ப்பை கிளப்பியது. ஒரு பெண்ணை, குறிப்பாக ஒரு நடிகையை, பொதுவெளியில் இவ்வாறு குறிப்பிட்டு பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என பலரும் கண்டனம் தெரிவித்தனர். “மக்கள் பிரதிநிதியாக இருந்தவர் பேசும் மொழி இவ்வாறு இருக்கக் கூடாது” என்ற விமர்சனமும் பல தரப்பில் எழுந்தது.

Advertisement

சர்ச்சை தீவிரமடைந்ததை தொடர்ந்து, சி.வி. சண்முகம் விளக்கம் அளிக்க நேர்ந்தது. “நயன்தாரா என்ற பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டது. எந்த விதமான தவறான நோக்கமும் இல்லை. யாருக்கும் மனவருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்கு நான் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

Nayanthara

இந்த சம்பவம், தேர்தல் காலத்தில் அரசியல் தலைவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் மற்றும் அவர்களின் பொது பொறுப்புணர்வு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக பெண்களைச் சுற்றிய கருத்துகளில் அரசியல்வாதிகள் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்ற விவாதம் மீண்டும் முன்வந்துள்ளது.

Amazon Link 3
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

தனுஷூக்கு அரசியல் எதிர்காலம் இருக்கு… விஜய்யால் முதல்வர் கனவில் வரிசை கட்டி நிற்கும் நடிகர்கள்…!

கோவை: எம்ஜிஆருக்குப் பிறகு யாரும் சினிமாவில் இருந்து வந்து அரசியலில் ஜெயிக்க முடியாது என்ற பேச்சுக்களை தவிடு பொடியாக்கிய முதல்வர் விஜய்யின் அரசியல் வளர்ச்சி, தமிழ் சினிமா திரையுலகில் பலருக்கும் முதல்வர் ஆசையை...

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...