கோவை வளர்ச்சி திட்டப்பணிகள்- கள ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்…

கோவை: கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Advertisement

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட உக்கடம் பகுதியில் ரூ.21.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தினை மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கட்டுமானப் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.591.14 கோடி மதிப்பீட்டில் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் சுமார்30.53 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு வீடுகளுக்கு பாதாள சாக்கடை திட்டத்திற்கான இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement

அந்த வகையில் தெற்கு மண்டலம். வார்டு எண்.99க்குட்பட்ட போத்தனூர் அற்புகும் நகர் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் உந்து நிலையத்தினையும் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் இணைப்பு வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுக- வார்டு மக்களுடன் கோவை கவுன்சிலர் தர்ணா…

கோவை: தன்னை சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும் என்று வார்டு மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி... தன்னை களங்கப்படுத்தியதாக கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.