திமுகவுக்கும் அதிமுகவுக்கும் உறவு உள்ளது என்றும் வேலுமணியை கைது செய்யாமல் இருக்க எத்தனை கோடி பெறப்பட்டது என்றும் கோவையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார்.
கோவை தொண்டாமுத்தூரில் நேற்று மாலை தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் கொள்கைப் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
Read news:சிங்கப்பெண்ணே சீரியல் நடிகைக்கு ஒரு நாள் சம்பளம் எத்தனை தெரியுமா? தலையே சுத்துதே!
தவெக 233 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நாம் வெற்றி பெறும் தொகுதிகளின் வரிசையில் தொண்டாமுத்தூர் இருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் அத்தனை பேர் மீதும் வழக்கு போடப்படும் என்று கூறிய ஸ்டாலின், ஒருவரைக் கூட கைது செய்யவில்லை, வழக்கும் போடவில்லை.
எஸ்.பி.வேலுமணியைக் கைது செய்யாமல், விட்டு வைக்க எத்தனை கோடி பெற்றீர்கள்? வேலுமணி குடித்த அதே ஊழல் பாலைத் தான் இப்போது ஸ்டாலின் குடிக்கிறார்.
தமிழகத்தில் தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என விஜய் கூறியிருந்தார். ஆனால் தொண்டாமுத்தூரில் தவெகவுக்கும், அதிமுகவுக்கும் தான் போட்டி. தி.மு.க விற்கும், அ.தி.மு.க விற்கும் உறவு உள்ளது
இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.

