பழங்குடியின மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடிய எஸ்.பி. வேலுமணி !!!

கோவை: தொண்டாமுத்தூரில் சீங்கம்பதி பழங்குடியினர் கிராமத்தில் மலைவாழ் மக்களுடன் இணைந்து எஸ்.பி. வேலுமணி பாரம்பரிய நடனமாடினார்.

Advertisement

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி, தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகச் சீங்கம்பதி பழங்குடியினர் கிராமத்திற்குச் சென்றார்.

அங்கு மலைவாழ் மக்கள் அவருக்கு வழங்கிய வரவேற்பு அனைவரையும் நெகிழச் செய்தது.

Read news:செட்டிபாளையத்தில் தலைதூக்கும் ரவுடிசம் – இளைஞர் மீது தாக்குதல் – வீடியோ

​தொண்டாமுத்தூர் தொகுதியின் மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாக்குகளைச் சேகரிக்கச் சென்ற எஸ்.பி. வேலுமணிக்கு, சீங்கம்பதி கிராம மக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

Advertisement

தங்களின் பாரம்பரிய இசை மற்றும் தாளங்களுக்கு ஏற்ப மக்கள் நடனமாடிக் கொண்டு இருந்த போது, அவர்களுடன் இணைந்து எஸ்.பி. வேலுமணியும் உற்சாகத்துடன் பாரம்பரிய நடனத்தைப் பகிர்ந்து கொண்டார்.

Read news:சாய்பாபா காலனி முதல் ரத்தினபுரி வரை: கோவை வடக்கில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வானதி சீனிவாசன்

Advertisement

அதிகாரப் பதவிகளைத் தாண்டி, சாமானிய மக்களுடன், குறிப்பாக மலைவாழ் மக்களுடன் அவர் கலந்துரையாடியது அப்பகுதி மக்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தங்களின் தேவைகளைக் கேட்டறிந்த எஸ்.பி. வேலுமணி, மீண்டும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கூடுதல் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்.

ஏற்கனவே தொகுதியின் வளர்ச்சிக்காகச் செய்து உள்ள பணிகளை விளக்கி, இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...