கோவை மாநகராட்சி வளர்ச்சிப்பணிகள்- ஆணையாளர் ஆய்வு…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பொதுமக்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில், கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மற்றும் மத்திய மண்டல எல்லைகளுக்குட்பட்ட பகுதியில் உள்ள கிளை வாய்க்காலினை அளவீடு செய்து தூர்வாருதல் தொடர்பாக, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, கிழக்கு மற்றும் மத்திய மண்டல எல்லைகளுக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களிடம் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டாமல், வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் கொடுக்க வேண்டுமென அறிவுரைகளை வழங்கினார்.

மேலும், தெற்கு மண்டலம், வார்டு எண்.86க்குட்பட்ட புல்லுக்காடு பகுதியில் மாநகராட்சி சார்பில் இயங்கி வரும் 46 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி செய்யும் (Solar Panel) சோலார் பேனலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் புதிதாக உயர்மட்ட கண்காணிப்பு கோபுரங்கள், தெருவிளக்குகள் மற்றும் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கொண்டையை மறைக்காத அண்ணாமலை- கோவையில் மாணிக்கம் தாகூர் தாக்கு!

கோவை: கொண்டையை மறைக்காமல் அமெரிக்காவில் இருந்து ஒருவர் வருகிறார் என அண்ணாமலையை மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார். கோவை, சவுரிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க அரசை கண்டித்தும், நீட் தேர்வு பாதிப்புகளை விளக்கியும்...

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...