கோவை: கோவையில் 16வது தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டிகள் துவங்கியது.
தேசிய அளவிலான 16வது ஜூனியர் ஹாக்கி போட்டிகள் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. இன்று முதல் துவங்கி எட்டாம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, ஹரியானா, பீகார், குஜராத் உள்ளிட்ட 29 அணிகள் போட்டியிடுகின்றன.

இதன் துவக்க விழா இன்று நடைபெற்றது இதில் தமிழ்நாடு ஹாக்கி அணியின் தலைவர் சேகர் மனோகர், கூடுதல் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்ட பிறகு இது போன்று தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் இங்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.




