கோவை: ஆயிரக் கணக்கான பெண்களுடன் இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடி வழிபட்டார் வானதி சீனிவாசன்.
கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மகா கந்த சஷ்டி கவசம் பாராயண நிகழ்வில் முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி வைத்து பெண்களுடன் இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடி வழிபட்டார்.
ஆறு நாட்கள் நடைபெறும் ‘மகா கந்த சஷ்டி கவசம் பாராயண’ ஆன்மீகப் பெருவிழா இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வானதி சீனிவாசன், குத்து விளக்கேற்றி வைத்து மகா பாராயணத்தை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, பக்தர்களோடு அமர்ந்து கந்த சஷ்டி கவசப் பாடலைப் பாடி முருகப்பெருமானை வழிபட்டார்.
இந்த ஆன்மீக நிகழ்வில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் திரளாகப் பங்கேற்றனர்.





