கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவம் சுட்டுப் பிடிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் உயிரிழப்பு…

கோவை: கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவத்தில் சுட்டு பிடிக்கப்பட்ட மூவரில் ஒருவர் உயிரிழந்தார்.

Advertisement

கோவையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்த நிலையில் அதில் ஆசிப் என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திதுள்ளது.

கோவையில் கடந்த வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள 13 வீடுகளில் பூட்டை உடைத்து 42 சவரன் தங்க நகைகளும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை தேடி வந்த போலீசார் குனியமுத்தூர் அடுத்த குளத்துப்பாளையம் பகுதியில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப், இர்ஃபான், கல்லு ஆகிய மூன்று பேரை சுற்றி வளைத்தனர்.

Advertisement

அப்போது காவல்துறையினரை தாக்கி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பி ஓட முற்பட்டதால் போலீசார் அம்மூவரையும் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.பின்னர் மூவரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் அவர்களது காலில் இருந்த துப்பாக்கி குண்டுகள் அகற்றப்பட்டன.

தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆசிப் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று நண்பகல் உயிரிழந்தார். இதையடுத்து நீதிபதி தலைமையிலான விசாரணை நடைபெற உள்ளதாகவும் நாளை பிரேத பரிசோதனை நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இதனிடையே ஆசிப் உயிரிழப்புக்கு காரணம் போலீசாரின் துப்பாக்கி சூடா அல்லது வேறு ஏதாவது காரணங்களா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஆசிப்பின் உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் மண்டியிட்டபடியே நடந்து வந்து மனு அளித்த காங்கிரஸ் கட்சியினர்…

கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு மண்டியிட்டப்படியே வந்து மனு அளித்த காங்கிரஸ் கட்சியினர். காங்கிரஸ் நிர்வாகியான இமயம் ரஹ்மத்துல்லா கோவை மாவட்ட துணை தலைவராக உள்ளார். இவரது தலைமையில், கைகளில் கோரிக்கை மனுக்களை ஏந்தியபடி...

Video

தடாகம் மக்களே கவனமா இருங்க… ஷட்டரை தட்டிய யானை… வீடியோ உள்ளே…

கோவை: கோவை தடாகம் பகுதியில் ஹோட்டல் கடை ஷட்டரை தட்டிப் பார்த்துச் சென்ற காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தொகுதிகள் ஆன தடாகம்...