கோவை: கோவை தண்ணீர் பந்தல் கொடிசியா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
கோவை மாநகர் தண்ணீர்பந்தல் S-bend சந்திப்பு முதல் கொடிசியா சாலையிலுள்ள மின்சார அலுவலகம் வரையுள்ள சாலையில், வருகின்ற 19.08.2026 ஆம் தேதி முதல் 07.09.2026 ஆம் தேதி வரை 20 நாட்களுக்கு கோவை மாநகராட்சியின் பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
எனவே தண்ணீர் பந்தல் S-bend சந்திப்பிலிருந்து கொடிசியா சாலையில் வாகனங்கள் செல்ல தடைசெய்யப்படுகிறது. எனவே, தண்ணீர் பந்தல் S-bend சந்திப்பிலிருந்து கொடிசியா வணிக வளாக சாலை வழியாக செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர இலகுரக வாகனங்கள் தண்ணீர்பந்தல் 9வது வீதி Foundry road வழியாக தமிழக வீட்டு வசதி வாரியத்தின் வழியாக கொடிசியா சாலையை அடைந்து, அவிநாசி சாலை வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
மேலும், கொடிசியா சாலை வழியாக அவிநாசி சாலை செல்லும் கனரக வாகனங்கள், தண்ணீர்பந்தல் S-bend சந்திப்பிலிருந்து காந்திமாநகர், பயனீர்மில் சாலை வழியாக அவிநாசி சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். சரவணம்பட்டியிலிருந்து கொடிசியா சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள். விளாங்குறிச்சி சாலை, காளப்பட்டி நான்கு சாலை வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.




