பாத்திரம் கழுவ மறுத்த ஆத்திரம்; நண்பரை கத்தியால் குத்திய தொழிலாளி

கோவை: கோவையில் பாத்திரம் கழுவச் சொன்னதால் ஏற்பட்ட தகராறில், வடமாநில தொழிலாளியை அவரது நண்பர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

கோவையில் பாத்திரம் கழுவச் சொன்னதால் ஏற்பட்ட தகராறில், வடமாநில தொழிலாளியை அவரது நண்பர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் குமார் (25), கோவையில் கவுண்டம்பாளையம் டிவிஎஸ் நகரில் அறை எடுத்து தங்கி, பெயிண்டராக வேலை செய்து வருகிறார். அவருடன் பீகாரைச் சேர்ந்த குணாலன் மற்றும் சில நண்பர்களும் தங்கி வந்தனர்.

சம்பவத்தன்று இரவு அனைவரும் ஒன்றாக சமைத்து சாப்பிட்டனர். பின்னர், பயன்படுத்திய பாத்திரங்களை கழுவுமாறு தீபக் குமார், குணாலனிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Advertisement

ஆத்திரமடைந்த குணாலன், தீபக் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தியதால், அனைவரும் வீட்டின் மொட்டை மாடியில் சென்று தூங்கினர்.

நள்ளிரவில் ஆத்திரம் அடங்காத குணாலன், கத்தியுடன் மொட்டை மாடிக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த தீபக் குமாரின் வயிற்றில் சரமாரியாக குத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

பலத்த காயமடைந்த தீபக் குமார் வலியால் அலறியதையடுத்து, அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவத்துக்குப் பிறகு குணாலன் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், தீபக் குமார் அளித்த புகாரின் பேரில் கவுண்டம்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள குணாலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

தவெகவிற்கு ஆதரவு ஏன்? வெளிப்படையாக பேசிய எஸ்.பி.வேலுமணி…

கோவை: திமுக எதிர்ப்பு என்பதால் தான் தவெகவிற்கு ஆதரவளித்தோம் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை புதூர் பகுதியில் உள்ள மண்டபத்தில் அதிமுக தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் அதிமுக...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.