மாணவ மாணவிகளின் கல்விக் கட்டணம் ரத்து- கோவை பார்க் கல்வி குழுமம் அறிவிப்பால் நெகிழ்ச்சி…

கோவை: கோவை பார்க் கல்வி குழுமத்தில் 10 மாணவ, மாணவிகளின் ஓராண்டு கல்விக்கட்டணம் ரத்து என முதன்மை செயல் அதிகாரி அனுஷாரவி அறிவித்துள்ளார்.

Advertisement

கோவை பார்க் கல்வி குழுமத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு “ஐகானிக் மாம் 2026” விருது வழங்கும் விழா, கல்லூரி அரங்கத்தில் விமர்சயாக நடைபெற்றது. கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி மற்றும் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் அனுஷா ரவி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.


ஒவ்வொரு ஆண்டும் ‘துர்கா’ என்ற பெயரில் சாதனைப் பெண்களைக் கௌரவித்து வரும் நிலையில், இந்த ஆண்டு மாணவ, மாணவிகளின் தாயார்களைக் கௌரவிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கில் இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்காக மாணவ, மாணவிகள் தங்கள் தாயார் குறித்து பேசிய காணொளிகள் வரவேற்கப்பட்டன. பெறப்பட்ட 752 காணொளிகளில், முதல் கட்டமாக 35 காணொளிகள் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் சமூக வலைதள வாக்கெடுப்பு மூலம் இறுதிப் பட்டியலாக 10 சிறந்த காணொளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
விழாவின் சிகர நிகழ்வாக, அந்த 10 சிறந்த மாணவ, மாணவிகளின் தாயார்களும் மேடைக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்குக் கிரீடம் சூட்டப்பட்டு, கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Advertisement

மாணவ, மாணவிகள் தங்கள் தாயார் குறித்துப் பேசிய உணர்ச்சிப்பூர்வமான காணொளிகள் திரையிடப்பட்டபோது, அரங்கமே நெகிழ்ச்சியில் ஆழ்ந்தது. அந்தத் தருணத்தில் மேடையில் பேசிய டாக்டர் அனுஷா ரவி, சாதனை படைத்த அந்த 10 மாணவ, மாணவிகளின் ஓராண்டு கல்விக்கட்டணத்தை முழுமையாக ரத்து செய்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த எதிர்பாராத அறிவிப்பு தாய்மார்களையும் மாணவ, மாணவிகளையும் ஆனந்தக் கண்ணீரில் நனைய வைத்தது.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மேடைப் பேச்சாளர் சாந்தாமணி பேசுகையில், இந்த நிகழ்வு தன்னையே கண்கலங்க வைத்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.

Advertisement

மகளிர் தினத்தின் போராட்ட வரலாற்றையும் பெண்களின் சாதனைகளையும் விளக்கிய அவர், பெற்றோர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களைக் கௌரவிக்க வேண்டும் என்றும், காலம் கடந்த பின் வருந்துவதில் பயனில்லை என்றும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கல்விக்கட்டண ரத்து மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகளால் இந்த மகளிர் தினக் கொண்டாட்டம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...