பிரச்சாரத்திற்காக வரும் பிரதமர் மோடி- கோவையில் ட்ரோன் பறக்க தடை…

கோவை: தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் வருகை புரிவதை முன்னிட்டு ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கேரளத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 9ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ், பா.ஜ.க. மாநில தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகளை சேகரிப்பதற்காக பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.

பிரதமர் மோடி நாளை பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்களில் தேசி ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். குறிப்பாக திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல் மந்திரி கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபாலை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அவர் ரோடு ஷாவிலும் பங்கேற்கிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி கோவை வந்து கேரளா செல்வதால் கோவையில் முக்கிய பகுதிகளில் இன்று முதல் நாளை மார்ச் 29 ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன்படி நீலாம்பூர், செட்டிபாளையம், எட்டிமடை, வாளையார், அவிநாசி சாலை, பீளமேடு, காளப்பட்டி, போத்தனூர் மற்றும் ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. நாளை பிற்பகல் 2 மணி அளவில் கோவை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு செல்கிறார்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ரசிகன் என்பதே முதல் அடையாளம்- ஜனநாயகனுக்கு வந்த அமைச்சர் சம்பத்குமார் பேட்டி…

கோவை: ரசிகன் என்பதே முதல் அடையாளம் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கோவை திரையரங்கில் டிஜே நிகழ்ச்சியுடன் ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் அமைச்சர் சம்பத்குமார் திரைப்படத்தை காண்பதற்கு வருகை புரிந்தார். இயக்குனர் வினோத்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...