ஓடாத படத்திற்கு ப்ரமோஷன்… கோவையில் சிரிப்பு காட்டிய கூல் சுரேஷ்…!

கோவை: லெஜெண்ட் சரவணன் நடிப்பில் வெளியாகியுள்ள லீடர் படம் வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறி கோவையில் தம்பட்டம் அடித்துள்ளார் நடிகர் கூல் சுரேஷ். இதனைப் பார்த்த் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் சிரித்தபடி சென்றனர்.

தொழிலதிபர் சரவணன் நடித்த லீடர் படம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளியானது. படம் 10 பைசாவுக்கு பிரியோஜனம் இல்லை என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், படம் ஆஹோ ஓஹோ வெற்றி பெற்றுவிட்டதாக கோவையில் கூல் சுரேஷ் தம்பட்டம் அடித்து சிரிப்பு காட்டியுள்ளார்.

கோவை நூறடி சாலையில் உள்ள கற்பகம் சினி காம்ப்ளக்ஸ் வளாகத்தில் லீடர் படத்தின் வெற்றி விழாக் கொண்டாட்டம் என்று கூறிக்கொண்டு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

இந்த நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் கூல் சுரேஷ், ஒரு மாட்டுவண்டியை தானே இழுத்து வருவது போன்று பாவல காட்டியபடி வந்தார். .

நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்த அவர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சிரிப்பை ஏற்படுத்தினார்.

இதன்பின்னர் பேசிய கூல் சுரேஷ்,

“நல்ல படங்களுக்கு ரசிகர்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள். லீடர் படம் அதற்கு ஒரு உதாரணம். இப்படம் மேலும் பெரிய வெற்றி பெற வேண்டும்” என்றார்.

“10 பைசாவுக்கு பிரியோஜனம் இல்லாத படத்திற்கே இந்த அலப்பறையா” என்ற அங்கிருந்த பொதுமக்கள் அவரை திட்டியபடி சென்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை தோற்கடித்தவர்களை நாம் தோற்கடிக்க வேண்டும்- அண்ணாமலை பரப்புரை…

கோவை: பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை தோற்கடித்த திமுகவையும் காங்கிரஸையும் நாம் தோற்கடிக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமாரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அண்ணாமலைக்கு,...

Video