கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்…

கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நாளை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது.

Advertisement

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (23.06.2026) செவ்வாய்க்கிழமை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் திருத்தம், மருத்துவம் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்து தீர்வு காணலாம்.

Advertisement

மேலும், இக்கோரிக்கை மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Coimbatore weather: கோவையில் அடுத்த 6 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

கோவையில் ஆகஸ்ட் 7 முதல் 13 வரை பகுதி நேர மேகமூட்டத்துடன், பெரும்பாலான நாட்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.