மழைநீர் வடிகால் பணிகள்- கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு…

கோவை: கோவையில் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில், அமைந்துள்ள மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.19-க்கு உட்பட்ட மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள நல்லாம்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் பகுதிகளுக்கு, குடிநீர் விநியோகத்தின் இடைவெளியை குறைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர், வடக்கு மண்டலம், வார்டு எண்.30-க்கு உட்பட்ட சித்தா தோட்டப் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் செல்லும் வழியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதையும், வார்டு எண்.28-க்கு உட்பட்ட ஆவாரம்பாளையம், சோபா நகர், பட்டாளம்மன் கோவில் வீதி பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலில் தடையின்றி நீர் செல்லும் வகையில் சரிசெய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், வார்டு எண்.27-க்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் பிரதான சாலை, பன்னாரியம்மன் கோவில் வீதி பகுதியில், மழைநீர் வடிகால் அமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் 2 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை – இட்லி கடை பெண் உரிமையாளர் கைது

கோவையில் 2 பவுன் தங்கச் செயினுக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், CCTV காட்சிகள் மற்றும் உடைந்த வளையல் தடயத்தின் அடிப்படையில் இட்லி கடை பெண் கைது.

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...