கோவையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக அமைக்க வேண்டும்- மாநகராட்சி ஆணையாளர்…

கோவை: கோவையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக அமைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார்.

கோவை மாநகராட்சியில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் மற்றும் அதன் கட்டமைப்புகளை முறையாக அமைப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வடவள்ளி இளங்கோ காலனி பகுதியில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையாளர் கந்தசாமி தேஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேற்கு மண்டலத் தலைவர் ஏ.கே.தெய்வயானை முன்னிலை வகித்தார்.

Advertisement

நிகழ்ச்சியில் பேசிய மாநகராட்சி ஆணையாளர், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும், கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும் மழைநீர் சேகரிப்பு மிகவும் அவசியம் எனத் தெரிவித்தார்.

மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுக் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக அமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Advertisement

மேலும், ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களில் அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும், கட்டமைப்புகள் இல்லாத கட்டடங்கள் மற்றும் தனியார் இடங்களில் புதிதாக அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும், தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.

தொடர்ந்து, தேவையற்ற பழைய பொருட்கள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பயன்பாடற்ற பொருட்களை அகற்றி, குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என நான்கு வகைகளாகப் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். மாநகராட்சியின் தூய்மைப் பணிகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கார்த்திகையும்… ஐயப்ப விரதமும்… பத்கர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது ஏன்?

கோவை: கார்த்திகை 1ம் தேதி பிறந்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருப்பது ஏன்? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தமிழ் மாதங்களில் மிகவும்...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...