பொள்ளாச்சியில் நாளை துவங்குகிறது கார்ப்பரேட் பஜார்…

கோவை: நாளை முதல் பொள்ளாச்சியில் கார்ப்பரேட் பஜார் துவங்குகிறது.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்டம்தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 08.10.2026 முதல் 10.10.2026 வரை கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, கோவில்பாளையத்தில் உள்ள Roots Industries Pvt.Ltd என்கிற நிறுவனத்தில் கார்ப்பரேட் பஜார் நடத்தப்பட உள்ளது.

மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் 40 அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தயாரித்த கைவினை பொருட்கள், ஆயத்த ஆடைகள், மூலிகைப் பொருட்கள், அழகுசாதன பொருட்கள், சிறுதானிய தின்பண்டங்கள், எண்ணெய் வகைகள் மற்றும் நெய் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

Advertisement

எனவே, அனைவரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை வாங்கி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சாதி பெயர் கொண்ட பகுதிகளுக்கு புதிய பெயர்கள் – கோவை மாநகராட்சியில் கோரிக்கை

கோவை மாநகராட்சி எல்லைக்குள் சாதி பெயர்களில் உள்ள தெருக்கள், ஊர்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என திராவிடர் தளம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...