ஜனநாயகன் படம் வெளியான விவகாரம்- எல்.முருகனை தோற்கடிக்க வேண்டும் என்று செங்கோட்டையன் தெரிவிப்பு…

கோவை: ஜனநாயகன் திரைப்படம் வெளியானதில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை நரசிம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் தவெக கவுண்டம்பாளையம் வேட்பாளர் கனிமொழி, மற்றும் மேட்டுப்பாளையம் வேட்பாளர் சுனில் ஆனந்த் ஆகியோரை நேரில் சந்தித்து தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.

தொடர்ந்து கட்சியின் தொண்டர்கள் நிர்வாகிகள் மத்தியில் பேசிய செங்கோட்டையன், புதிய தலைமை தமிழ்நாட்டுக்கு வேண்டும் என்பது மக்களின் எண்ணமாக இருப்பதாகவும் தற்பொழுது ஆண்டு வரும் நிலைமையை பார்த்து வரும் பொழுது தீய சக்தியாகவும் ஊழல் ஆட்சியாகவும் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும் என்பதுதான் மக்களின் ஆசையாக உள்ளது மக்களின் ஆசையை நிறைவேற்றும் ஒரே சக்தி தமிழக வெற்றி கழகம் விஜய் தான் என்றார்.

நாம் தேர்தல் பணி ஆற்ற உள்ளோம் மக்கள் நமக்கு வாக்களிக்க தயாராக உள்ளார்கள் அந்த வாக்கை சிந்தாமல் செதராமல் பெற வேண்டியது நம்முடைய கடமை, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்படக்கூடிய ஒரே இயக்கம் தமிழக வெற்றி கழகம் தான் என்று கூறினார். நான் ஒவ்வொரு பகுதிக்கும் செல்கின்ற பொழுதும் பத்து முறை தோற்ற பழனிச்சாமியால் திமுகவை வீழ்த்த முடியாது அதற்கு மாற்றாக நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டாம் அது வீணாகிவிடும் ஆகவே அனைத்து ஓட்டுகளையும் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி வருவதாக குறிப்பிட்டார்.

Advertisement

திமுக 8 ஆயிரம் ரூபாய் டோக்கன் கொடுத்துள்ளது எட்டு கொடுத்தால் முடிந்து விட்டது என்றைக்கு ஓடாது என்றார். திமுக வெற்றி பெற முடியாது என்பது தெரிகிறது ஆகவே நாம் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றார்.

நம்மிடம் உழைப்பு உற்சாகம் மக்கள் ஆதரவு அனைத்தும் உள்ளது என்றார். மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட எடுக்க மாட்டேன் என்று விஜய் கூறியுள்ளார், இதனை வேறு எந்த கட்சிகளும் கூற முடியாது என்று தெரிவித்தார். ஜனநாயகன் திரைப்படம் வெளியானதை குறிப்பிட்டு பேசிய அவர் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துள்ளார்கள் என்று தெரிவித்தார்.

Advertisement

அதை யார் செய்தார்கள் என்று பார்க்க வேண்டும் அந்த துறைக்கான அமைச்சர் யார் என்று பார்க்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகனை சாடிய அவர் பழனி முருகனை வேண்டுகிறேன் எல் முருகனை தோற்கடித்து டெல்லிக்கு அனுப்ப வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.

இத்தனையையும் தாங்கிக் கொண்டு ஒரு தலைவர் நமக்காக வருகிறார் என்றார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

Comments are closed.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...