கோவையில் RKVY-RAFTAAR-R-ABI மானியம்

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தொழில்நுட்ப வணிக காப்பகம் மற்றும் மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்தின் -RKVY-RAFTAAR-R-ABI மானியம் வழங்கும் விழா நடைபெற்றது.

மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்தின் Rashtriya Krishi Vikas Yojana – Remunerative Approaches for Agriculture and Allied sectors Rejuvenation -Regional Agribusiness Incubators (RKVY-RAFTAAR-R-ABI) திட்டத்தின் கீழ் 60 வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக இயக்குனரகம்தொழில்நுட்ப வணிக காப்பகத்தில் 2019-ல் முதல் செயல்பட்டு வருகின்றது.

Advertisement

இத்திட்டத்தில் மூன்று பிரிவுகள் மூலம் மானியம் வழங்கப்படுகின்றது. புதிய வேளாண் தொழில் முனைவோர்களுக்கான (AOP) ரூ. 5 இலட்சம் வரையிலான மானியத் தொகை, வேளாண் துளிர் நிறுவனங்களுக்கான (SAIP) ரூ.25 இலட்சம் வரையிலான மானியத் தொகை மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்தின் MoA & FW- RKVY-திட்டத்தின் கீழ் 2019 முதல் இதுவரை ரூபாய் 17.26 கோடி மானியம் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் 165 தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்தின் (RKVY-RAFTAAR-R-ABI) கீழ் தேர்ந்தெடுக்கபட்ட புத்தொழில் முனைவோர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர்.K.சுப்பிரமணியன் அவர்கள் ரூ.45.40 இலட்சம் வேளாண் துளிர் நிறுவனங்கள் SAIP Cohort-VI, 11 மானியதாரர்களுக்கும், ரூ.30.00 இலட்சம் புதிய வேளாண் தொழில் முனைவோர்களுக்கு AOP Cohort VI ன் 10 மானியதாரர்களுக்கும் மற்றும் ரூ.7.80 இலட்சம் மாணவர் தொழில் முனைவோர் வழிகாட்டுதல் திட்டம் துளிர் நிறுவனங்களுக்கும் SOP Cohort-VI 4 மானியதாரர்களுக்கும் ஆக மொத்தமாக ரூபாய்.83.20 இலட்சம் வழங்கினார்.

அவர் தனது உரையில் இளம் பட்டதாரிகளை வேளாண்மை சார்ந்த தொழிலில் ஈடுபடுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் நிலையான மற்றும் இலாபகரமான விவசாய வணிகத்திற்காக புதிய தொழில்நுட்பங்களை புதுமைப்படுத்தவும் செயல்படுத்தவும், விவசாயம் சார்ந்த தொழில் முனைவோர்களை வழிகாட்டும் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் முனைவர் சோமசுந்தரம் இயக்குநர், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம் அவர்கள் வரவேற்புரையாற்றினார் மற்றும் ஞானசம்பந்தம், செயல் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, தொழில் நுட்ப வணிக காப்பகம் நன்றியுரை வழங்கினார். மேலும் இவ்விழாவில் பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் தொழில் முனை வோர்கள் கலந்து கொண்டனர் இத் திட்டத்தின் கீழ் மானியம் பெற்ற தொழில் முனைவோர்கள் தங்கள் மானியத்தை வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தி கொள்வர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கொண்டையை மறைக்காத அண்ணாமலை- கோவையில் மாணிக்கம் தாகூர் தாக்கு!

கோவை: கொண்டையை மறைக்காமல் அமெரிக்காவில் இருந்து ஒருவர் வருகிறார் என அண்ணாமலையை மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார். கோவை, சவுரிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க அரசை கண்டித்தும், நீட் தேர்வு பாதிப்புகளை விளக்கியும்...

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...