கோவை: டெல்டா மாவட்டங்களில் இருந்து கோவைக்கு 2500 டன் அரிசி வந்தடைந்தன.
வருடம் தோறும் குறிப்பிட்ட மாத இடைவெளியில் டெல்டா மாவட்டங்களில் இருந்து நியாயவிலை கடைகளுக்கான அரிசிகள் டெல்டா மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்படும். ரயில்கள் மூலம் கோவை வடகோவை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்படும் அரிசிகள் அரசின் குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அனைத்து சரிபார்க்கபடும்.
பின்னர் அங்கிருந்து கோவை மாவட்டம் முழுவதும் சப்ளை செய்யப்படும். அதன்படி தற்போது தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் இருந்து 2500 டன் அரிசி ரயில் மூலம் கோவை வந்தடைந்தது.
வடகோவை ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த இந்த அரிசி மூட்டைகள் குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கோவை மாநகர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளுக்கு தேவைகளுக்கேற்ப அனுப்பி வைக்கப்படும்.




