கோவையில் காதல் மனைவியின் ஒரு நாள் கோபத்தால் கணவன் விபரீத முடிவு!

கோவை: கோவையில் காதல் திருமணம் செய்து கொண்ட மாநகராட்சி தூய்மை பணியாளர் விபரீத முடிவு எடுத்த சம்பவம் சக ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள வெங்கிட்டாபுரம், சுப்பிரமணியபுரம் 2வது வீதியை சேர்ந்தவர் ராமு (32). மாநகராட்சி தூய்மை பணியாளர். இவரது மனைவி சுகன்யா (32). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் ராமு காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரது குடும்பத்தினர், அவருடனான தொடர்பை துண்டித்ததாக தெரிகிறது. இதனால் ராமு மனவேதனையுடன் இருந்து வந்தார்.

மேலும், மது பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 16ம் தேதி வழக்கம் போல ராமு மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை சுகன்யா அவரை கண்டித்துள்ளார்.

Advertisement

அப்போது அவர்களுக்கு அடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. சுகன்யா கோபித்துக் கொண்டு குழந்தையை அழைத்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் சமாதானமாகி சுகன்யா வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வெகு நேரமாக சுகன்யா கதவை தட்டி பார்த்தார். ஆனால் ராமு கதவை திறக்கவில்லை. சந்தேகமடைந்த சுகன்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

Advertisement

அங்கு ராமு தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராமு உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Flipkart Link 2
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...