கோவையில் அதிர்ச்சி… கல்லூரி மாணவியை சீரழித்த கும்பல்…!

கோவை: கோவையில் மூன்று பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து கோவை மாநகர போலீசார் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள காலி இடத்தில் தனியார் கல்லூரி மாணவி அவரது ஆண் நண்பருடன் காரில் நின்று பேசிக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மூன்று பேர் ஆண் நண்பரை கடுமையாக தாக்கினர். அப்போது இருவரும் தப்பிக்க முயற்சித்த நிலையில், கார் கண்ணாடிகளையும் உடைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மூன்று பேரரும் கொடூரமாகத் தாக்கியதில் அந்த ஆண் நண்பர் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து கல்லூரி மாணவியை பலவந்தமாகத் தூக்கிச் சென்ற கொடூரர்கள் மூன்று பேரும், சுமார் 500 மீட்டர் தொலைவில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடினர்.

இதுகுறித்து அந்த ஆண் நண்பர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். நடந்த சம்பவங்களைக் கேட்டு அதிர்ச்சியடைந்து அங்கு வந்த பீளமேடு காவல்துறையினர் ஆண் நண்பரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், அந்தப் மாணவியைத் தேடிய நிலையில் அவர் பலத்த காயங்களுடன் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் 7 தனி படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து அந்த மூன்று பேரை பீளமேடு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வடமாநிலங்களிலும், பல ஊர்களிலும் நடைபெற்ற அதிர்ச்சிகர சம்பவம் கோவை மண்ணிலும் அடங்கேறியுள்ளது. இளம் பெண்களே, மாணவிகளே… பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருங்கள். தனிமையான இடங்களுக்குச் செல்லும் முன்பு, அங்குள்ள பிரச்சினைகள் குறித்து யோசியுங்கள்.

பெண்களின் கையில் வைத்திருக்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் 👇

Recent News

கோவையில் ரோட்டில் குப்பை வீசினால் நோட்டீஸ்- மாநகராட்சி நிர்வாகத்தின் எச்சரிக்கை…

கோவை: கோவை மாநகரில் குப்பைகளை ரோட்டில் வீசுவோருக்கு எச்சரிக்கை நோட்டீஸை மாநகராட்சி நிர்வாகம் அனுப்புகிறது. கோவை மாநகராட்சி பகுதியில் பொது இடங்களில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அவற்றை...

Video

தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
Join WhatsApp