கோவை: கோவை வ.உ.சி.மைதானம் உயிரியல் பூங்கா வளாகத்தில், ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் நீச்சல் குளம் கட்டுமானப் பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி,மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வ.உ.சி.மைதானம் உயிரியல் பூங்கா வளாகத்தில், நடைபெற்றுவரும் சர்வதேச தரத்தில் நீச்சல் குளம் கட்டுமானப் பணிகள், டாடாபாத், ராஜ வீதியில், கோயம்புத்தூர் மாநகராட்சி வணிக வளாகம் புனரமைக்கும் பணிகள் ஆகியவற்றை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.68க்கு உட்பட்ட டாடாபாத், ராஜ வீதியில், கோயம்புத்தூர் மாநகராட்சி வணிக வளாகம் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், வார்டு எண்.83க்கு உட்பட்ட வ.உ.சி.மைதானம் உயிரியல் பூங்கா வளாகத்தில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் நீச்சல் குளம் கட்டுமானப் பணி நடைபெற்று வருவதையும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, மத்திய மண்டலம், வார்டு எண். 69க்கு உட்பட்ட பாரதி பார்க் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவினை பார்வையிட்டு, பூங்காவில் சேகாரமாகும் குப்பைகளை தினந்தோறும் அகற்றி, தூய்மையாக பராமரித்திடவும், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் சரியாக உள்ளதாக என தினந்தோறும் ஆய்வு செய்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது. உதவி ஆணையர் கணேசன், உதவி அலுவலர் செயற்பொறியாளர் சரவணக்குமார்(பொ), மண்டல சுகாதார குணசேகரன், உதவி பொறியாளர் சதீஷ்குமார், சுகாதார ஆய்வாளர்கள் சரவணக்குமார். லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.




