கோவை: கோவை கோனியம்மன் கோவில் உண்டியல் பணம் திருட்டு விவகாரத்தில் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கோவை கோனியம்மன் கோவில் உண்டியல் பணம் திருட்டு விவகாரத்தில் உதவி ஆணையர் உட்பட அதிகாரிகளை பணிநிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோவிலில் கடந்த 15 ம் தேதி இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது.
அதில் ஒரு உண்டியலை மட்டும் ஊழியர்கள் தனியாக எடுத்து வைத்து அதில் இருந்த பணத்தை திருடியதாக பக்தர் ஒருவர் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக புகார் அளித்தார். அதனை தொடர்ந்து ,இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் ஒரு உண்டியலை மட்டும் எண்ணாமல் அதிலிருந்த 30 ஆயிரம் பணத்தை கோவிலில் பணிபுரியும் பாலசுப்பிரமணியன் , சரவணன் , பிரதீப் குமார், கோயில் பூசாரி கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேர் கையாடல் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இந்து சமய அறநிலையதுறை அதிகாரிகள் புகாரின் பேரின் பேரில் பூசாரி உட்பட 4 பேரையும்
உக்கடம் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறவ அமைச்சர் ரமேஷ், கோவில் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட பாலசுப்பிமணியன், சரவணன், பிரதீப்குமார், கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேரையும், கண்டறியாமல் இருந்த இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் உஷா நந்தினி, கோவில் செயல் அலுவலர் குமார்,சரக ஆய்வாளர்கள் ராம்குமார், உதயகுமார் ஆகியோரை சஸ்பென்ட் செய்ய உத்தரவிட்டார்.





