Coimbatore weather: இந்தவாரம் வெப்பத்தில் சென்னையை மிஞ்சுகிறது நம்ம கோவை…!

கோவை: கோவையில் இந்த வாரம் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல நாட்களாக குளுகுளு வென்ற சீதோஷன நிலையில் வாழ்ந்து வந்த கோவை மக்கள், திடீரென வெப்பம் அதிகரித்து வருவதால் அவதியடைந்து வருகின்றனர்.

கடந்த வாரம் கோவையில் குறைந்தபட்ச, 18 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. இந்த நிலையில், இந்த வாரம் கோவையில் வெப்பம் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கோவையில் இன்று முதல் பிப்ரவரி 18ம் தேதி வரை குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

பிப்ரவரி 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை வெப்பநிலை 1 டிகிரி அதிகரிக்கும் என்றும், அப்போது குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் இந்த வாரம் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில், கோவையில் சென்னையை விட அதிக வெப்பம் பதிவாகும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு கோவை மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் இளைஞர்களுக்கு டிராக்டர் ஓட்டும் பயிற்சி- விண்ணபிக்கும் விவரங்கள் இதோ…

கோவை: கோவையில் இளைஞர்களுக்கு டிராக்டர் ஓட்டும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் உதவி உழுவை இயக்குநர் பயிற்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் பயிற்சி...

Latest News Coimbatore

Video

அன்னூர் பகுதியில் பிக்கப் வாகனம் மீது மோதிய பொலிரோ- பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் டாஸ்மாக் அருகே நின்று இருந்த பிக்கப் வேன் மீது அதிவேகமாக மோதிய பொலிரோ காரின் பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை, அன்னூரில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில்...