கோவை: கோவையில் செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ரோகித்குமார் (24). இவர் கடந்த 25ம் தேதி இரவு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் ஜன்னல் அருகே வைத்திருந்த செல்போனை திருடி சென்றார். இதுகுறித்து ரோகித்குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் செல்போன் திருடியது ராமநாதபுரத்தை சேர்ந்த விஜய் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.




