கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு…

கோவை: கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Advertisement

தமிழகம் முழுவதும் நேற்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. கோவை மாவட்டத்திலும் அமைதியாக முறையில் நடைபெற்றது. மொத்தம் 84.67 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களும் , தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

அதனை கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பவன்குமார் பார்வையிட்டார்.

Advertisement

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த முறை அதிகப்படியான வாக்குகள் பதிவாகி உள்ளது. 85 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளது.

கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில் நுட்ப கல்லூரி கொண்டு வரப்பட்டு உள்ளது. பொதுபார்வையாளர் , முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

Advertisement

எந்த ஒரு இடத்திலும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு இல்லை மறு வாக்குப்பதிவுக்கான சூழ்நிலை இல்லை. இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 300 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி ஏஜென்டுகள் பார்ப்பதறகு தனியாக வசதி செய்யப்பட்டுள்ளது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...