சென்சேஷனல் நடிகராக வலம் வரும் பிரதீப் ரங்கநாதனுக்கு இந்த ஆண்டு அடி மீது அடி விழுந்துள்ளது.
நடிகராக மாறிய இயக்குநர்
இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் கோமாளி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்,. கோமாளி படத்தில் நல்ல கருத்து சொன்ன பிரதீப், ஒரு காட்சியில் நடித்து பிரபலமானார்.

பின்னர் இவர் இயக்கி நடித்த லவ் டுடே படம், இளைஞர்கள் மட்டுமல்லாமல் குடும்பங்களையும் கவர்ந்தது. படமும் ரூ.100 கோடி வசூலை தாண்டியதால் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அடுத்த படத்துக்கும் பிரதீப்பை கமிட் செய்தார்.
ஹாட்ரிக் வெற்றி
தொடர்ந்து டிராகன் படத்தில் இணைந்த கூட்டணிக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. டிராகனை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவுக்கு பாராட்டுகள் குவிந்தது. படம் ரூ.100 கோடி வசூலை தாண்டியதால் சென்சேஷனல் நடிகராக மாறினார் பிரதீப்.
இதையடுத்து புதுமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் படத்தில் நடித்தார். இந்த படம் 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், GEN Z தலைமுறையினர் கொண்டாடினர்.

கலவையான விமர்சனங்களை பெற்றாலும், படத்துக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் வந்தது. ரூ.100 கோடி கிளப்பில் படம் இணைந்ததால் ஹாட்ரிக் வெற்றியை ருசி பார்த்தார் பிரதீப்.
கொட்டிய வாய்ப்புகள்
ரவி மோகன், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, தனுஷ், சிம்பு போன்ற நடிகர்களின் படமே 100 கோடி ரூபாய் வசூலை செய்யவில்லை. ஆனால் யாருடா இந்த பையன் என்ற ரேஞ்சுக்கு பிரதீப் கோலிவுட்டையே அதிரவைத்தார்.

இதனால் அவருக்கு இயக்கத்தை விட நடிகராக நடிக்க வாய்ப்புகள் கொட்டியது. அதனால் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். விக்னேஷ் சிவனுக்கு சரியான ஹிட் அமையாததால் வித்தியாசமான கதைக் களத்துடன் பிரதீபை அணுகி ஓகே வாங்கினார்
வெற்றிக்கு முற்றுப்புள்ளி
2040ல் நடக்கும் கதையை அம்சமாக கொண்டு அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. 95 முதல் 100 கோடி ரூபாய் இந்த படத்துக்கு பட்ஜெட் போடப்பட்ட நிலையில், படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
முதல் நாள் நல்ல வசூலை ஈட்டிய lik அடுத்தடுத்த நாட்களில் குறைந்தது. இதுவரை சுமார் 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதால் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியையே தழுவியது.

தொடர் வெற்றிகளை மட்டும் பார்த்து வந்த பிரதீப்புக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியைடையும் என எதிர்பார்த்தவர்களுக்குபேரிடியாக அமைந்துள்ளது.
விக்னேஷ் சிவனுக்கு இந்த படமும் தோல்வி படமாகவே முடிந்துள்ளது, பிரதீப் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


