ஈச்சனாரியில் பூட்டிய வீட்டில் கொள்ளை.. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போலீசார்!

கோவை: கோவை ஈச்சனாரி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (33). இவர் கோவை செட்டிபாளையம் ரோடு ஈச்சனாரி பகுதியில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு கடந்த 11-ம் தேதி ஜெகதீசன் தனது சொந்த ஊரான ஈரோட்டுக்கு சென்றுள்ளார். வீட்டை பூட்டி விட்டு அவர் ஊருக்கு சென்ற நிலையில், மர்ம நபர்கள் அவரது வீட்டை நோட்டமிட்டதாக தெரிகிறது.

இதற்கிடையில், நேற்று முன்தினம் ஜெகதீசனின் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்த பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக ஜெகதீசனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

Advertisement

இதையடுத்து கோவையில் இருந்து ஈச்சனாரிக்கு வந்த ஜெகதீசன், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளன. மேலும், வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெகதீசன், சம்பவம் குறித்து சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisement

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருட்டு நடைபெற்ற வீட்டின் சுற்றுப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை பயன்படுத்தி பூட்டிய வீட்டை மர்ம நபர்கள் நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் இரு சக்கர வாகனங்களில் சென்று ஆய்வு செய்த அமைச்சர்கள்…

கோவை: கோவை சிட்கோ தொழில் பேட்டையில் அமைச்சர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். கோவை பொள்ளாச்சி சாலை சிட்கோ தொழிற்பேட்டையில் 250க்கும் மேற்பட்ட சிறு குறு நடுத்தர தொழில்...

Video

தடாகத்தில் மீண்டும் வேட்டையன்- மக்கள் அச்சம்…

கோவை: தடாகம் நஞ்சுண்டாபுரம்மீண்டும் வலம் வந்த வேட்டையன்காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை செடி,...