12 ராசிகளுக்கான இன்றைய ( 14.4.2026) ராசிபலனை இந்த தொகுப்பில் காணலாம்
மேஷம்
புத்தாண்டு பிறக்கும் இன்றைய நாளில் புதிய முயற்சிகள் அனைத்தும் மகத்தான வெற்றியைத் தரும். பொருளாதார நிலை உயரும் என்பதால் குடும்பத் தேவைகளை எளிதாக நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மனதிற்குப் பிடித்த சுப செய்திகள் வந்து சேரும்.
ரிஷபம்
திட்டமிட்ட காரியங்களைச் செம்மையாகச் செய்து முடித்து அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமிதம் தரும். ஆரோக்கியம் சீராக இருக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.
மிதுனம்
சமூகத்தில் செல்வாக்கு உயரும் நாளாக அமையும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது இடமாற்றம் கைகூடும். நண்பர்களின் உதவியால் பழைய சிக்கல்கள் தீரும். சுப காரிய பேச்சுக்கள் நல்ல முடிவுக்கு வரும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் கூடும். மனத்தெளிவுடன் செயல்படுவீர்கள்.
கடகம்
வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். வர வேண்டிய கடன் நிலுவைகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமையை அங்கீகரிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும். பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும்.
சிம்மம்
இன்று உங்களுக்குச் சந்திராஷ்டமம் நிலவுவதால் செயல்களில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது. முக்கியமான ஆவணங்களில் கையெழுத்திடுவதைத் தள்ளிப்போடுங்கள். வாகனப் பயணங்களில் நிதானம் அவசியம். இறைவழிபாட்டின் மூலம் மனக்குழப்பங்களைக் கடந்து செல்லலாம்.
கன்னி
நீண்ட காலத் திட்டங்கள் இன்று நிறைவேறத் தொடங்கும். பணப்புழக்கம் சரளமாக இருப்பதால் சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனைகளுக்குத் தனி மரியாதை கிடைக்கும். உறவினர்களிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளத் திட்டமிடுவீர்கள். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
துலாம்
மனதில் துணிச்சலும் உற்சாகமும் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் இணக்கமான சூழல் நிலவும். பிள்ளைகளின் திருமணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். பூர்வீக சொத்து விவகாரங்களில் சாதகமான திருப்பங்கள் ஏற்படும். புதிய வாகனம் வாங்கும் யோகம் கூடிவரும்.
விருச்சிகம்
பொருளாதார ரீதியாகச் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் உங்கள் பொறுப்புகள் கூடினாலும் அதனைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு இதம் தரும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரியும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
தனுசு
முக்கியமான முடிவுகளைத் தைரியமாக எடுத்துப் பலன் காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யச் சாதகமான சூழல் உள்ளது. உத்தியோகத்தில் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் ஏற்பாடாகும். ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வங்கிக் கடன் தொடர்பான உதவிகள் தடையின்றி கிடைக்கும்.
மகரம்
செல்வாக்கும் கீர்த்தியும் உயரும் நன்னாளாக அமையும். தொழில் ரீதியாக மேற்கொண்ட பயணங்கள் எதிர்பார்த்த லாபத்தைத் தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கும். மனைவியின் பெயரில் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். நிலுவையில் இருந்த அரசு வழி காரியங்கள் விரைந்து முடியும். மகிழ்ச்சி பொங்கும்.
கும்பம்
புதிய சிந்தனைகள் மற்றும் திட்டங்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் மறைந்து லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவிய சிறுசிறு சண்டைகள் மறைந்து ஒற்றுமை கூடும். உத்தியோகத்தில் இருந்த இடர்பாடுகள் நீங்கும். மாணவர்களுக்குக் கல்வியில் கூடுதல் ஆர்வம் உண்டாகும்.
மீனம்
மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மனநிறைவு பெறுவீர்கள். தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறன் வெளிப்படும். பொருளாதார வசதிகள் பெருகும் என்பதால் ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரித்து மன அமைதி கிட்டும். பயணங்கள் நன்மையில் முடியும்.


