Coimbatore Weather: மக்களே கோடை மழைக்கு ரெடியா இருங்க!

Coimbatore Weather: கோவையில் இந்த வாரம் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

கோவையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெப்பத்தால் மக்கள் வீட்டில் இருந்து வெளியேறவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது.

இரவு நேரத்திலும் புழுக்கம் அதிகமாக உணரப்படுவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதியில் உள்ளனர். இதனிடையே கோவை மாவட்டத்தில் இந்த வாரம் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதன்படி இந்த வார வானிலை முன்னறிவிப்பை இங்கே காணலாம்:

Advertisement

ஏப்ரல் 14 (செவ்வாய்): பகலில் வெப்பம் அதிகமாக இருக்கும். வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்பு. வெப்பநிலை குறைந்தபட்சம் 25°C முதல் அதிகபட்சம் 38°C வரை பதிவாக வாய்ப்புள்ளது.

ஏப்ரல் 15 (புதன்): நாளை வெப்பம் மேலும் அதிகரிக்கும். மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் 25°C முதல் அதிகபட்சம் 39°C வரை வெப்பம் பதிவாகலாம்.

Advertisement

ஏப்ரல் 16 (வியாழன்): பகலில் கடும் வெப்பம் நிலவும். மேகமூட்டத்துடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சம் 39°C வரை வெப்பம் வாட்டும்.

ஏப்ரல் 17 (வெள்ளி): வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் இருக்கும். மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்சம் 25°C முதல் அதிகபட்சம் 39°C வரை வெப்பம் பதிவாகும்.

ஏப்ரல் 18 (சனி): மாலை நேரத்தில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை முந்தைய தினம் அளவிலேயே நீடிக்கும்.

ஏப்ரல் 19 (ஞாயிறு): அதே வெப்பநிலை நீடிக்கும். மேகமூட்டத்துடன் லேசான மழை வாய்ப்புள்ளது.

மொத்தத்தில், கோவையில் அடுத்த சில நாட்களுக்கு கடும் வெப்பம் காணப்படும். அதே நேரத்தில் வெயிலுக்கு இதமான மழையும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடும் வெயிலில் பணியாற்றும் உங்கள் உறவுகள், நண்பர்களுக்கு இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள் வாசகர்களே…

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பேட்மின்டனில் வெற்றிக்கொடி நாட்டி சீனா செல்லும் கோவை வெங்கீஸ் பயிற்சி மைய மாணவி!

சேலத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி அனு ஸ்ரீ, கோவை வெங்கீஸ் பேட்மின்டன் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, சீனாவில் நடைபெறும் ஏசியன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தியாவுக்காக பதக்கம் வெல்வதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...