Today Rasipalan | இன்றைய ராசிபலன் மற்றும் சந்திராஷ்டமம்

Today Rasipalan : 12 ராசிகளுக்கான ஜூலை 3ஆம் தேதிக்கான ராசி பலன்களை இந்த தொகுப்பில் காணலாம்.

மேஷம்
இன்று உங்களுக்கு துணிச்சலான முடிவுகளால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.

Advertisement

ரிஷபம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நீண்ட தூர பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

மிதுனம்
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் நீடிப்பதால் புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பேச்சில் நிதானத்தை கடைப்பிடியுங்கள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து, பண பரிவர்த்தனைகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது இன்று அவசியமாகும்.

கடகம்
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய முடிவுகள் எடுப்பதையும் புதிய காரியங்களை ஆரம்பிப்பதையும் தள்ளிப்போடவும். வாகன பயணங்களின் போது கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் அமைதி காப்பது நன்மையை தரும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் கைகூடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரித்து மன அமைதி தரும். ஆரோக்கியம் சீராகி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

Advertisement

கன்னி
இன்று உங்களுக்கு பணிச்சுமை காரணமாக அலைச்சலும் உடல் சோர்வும் ஏற்படலாம். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியைத் தரும். வரவுக்கு மிஞ்சிய சுபச்செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தினரின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது.

துலாம்
இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடை மற்றும் ஆபரணங்கள் சேர்க்கை உண்டாக வாய்ப்புள்ளது. தொழில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் ஏற்படும். பண வரவு தாராளமாக இருக்கும்.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு தேவையற்ற வீண் செலவுகளால் பண நெருக்கடி ஏற்படலாம். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது விரயங்களை தவிர்க்க உதவும். தூரத்து உறவினர்களால் சில சங்கடங்கள் வரலாம். கூட்டு வியாபாரத்தில் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகும்.

தனுசு
இன்று உங்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் நாளாக அமையும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து பண வரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் இடமாற்றத்திற்கான வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்து காணப்படும்.

மகரம்
இன்று உங்களுக்கு தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த அரசு காரியங்கள் எளிதில் முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும் நாளாக அமையும்.

கும்பம்
இன்று உங்களுக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும்.

மீனம்
இன்று உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். பிள்ளைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் இருந்த கவலைகள் நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...