கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்…

கோவை: விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை முன்னிட்டு நாளை கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Advertisement

கோவை மாநகரில் நாளை 16.09.2026 ஆம் தேதி புதன் கிழமை விநாயகர் சிலை ஊர்வலமானது 12.00 மணிக்கு குனியமுத்தூர் தர்மராஜா கோயிலிருந்து புறப்பட்டு குனியமுத்தூர், பாலக்காடு ரோடு வழியாக குனியமுத்தூர் குளத்தில் கரைக்கப்படுவதாலும் மேலும் 02.00 மணிக்கு போத்தனூர் சாரதா மில் ரோட்டில் ஆரம்பித்து சங்கம் வீதியில் ஒன்று கூடி சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி ரோட்டில் சென்று குறிச்சி குளத்தில் கரைக்க படுவதை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள், விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு 16.09.2026 அன்று காலை 08.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கோவை மாநகரத்திற்குள் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் இயக்க தடை விதிக்கப்படுகிறது.

பொள்ளாச்சியிலிருந்து உக்கடம் வரும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் L&T பைபாஸ் ஈச்சனாரி சர்வீஸ் ரோடு வழியாக வந்து ஈச்சனாரி விநாயகர் கோவில் முன்பு U Turn செய்து செட்டிபாளையம் ரோடு வழியாக GD Tankரயில் கல்யாண மண்டபம் சந்திப்பு போத்தனூர் கடைவீதி அடைந்து நஞ்சுண்டாபுரம் சாலை மற்றும் இராமநாதபுரம் வழியாகவும் மற்றும் குறிச்சி பிரிவு ஆத்துப்பாலம் வழியாகவும் உக்கடம் வந்தடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

Advertisement

பொள்ளச்சி சாலையிலிருந்து உக்கடம் நோக்கி வரும் இலகுரக வாகனங்கள் ஈச்சனாரி LIC Colony Junction தக்காளி மார்க்கெட்டில் வலது புறமாக திரும்பி சாரதாமில் ரோடு. ரயில் கல்யாணமண்டபம் சந்திப்பு, போத்தனூர் கடைவீதி அடைந்து நஞ்சுண்டாபுரம் சாலை மற்றும் இராமநாதபுரம் வழியாகவும் மற்றும் குறிச்சி பிரிவு ஆத்துப்பாலம் வழியாகவும் உக்கடம் வந்தடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்

மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக உக்கடம் வரும் பேருந்துகள் காமராஜபுரம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி LIC Colony Junction வந்தடைந்து பேருந்துகள் ஈச்சனாரி ரோடு செட்டிபாளையம் ரோடு வழியாக போத்தனூர் கடை வீதியை அடைந்து நஞ்சுண்டாபுரம், இராமநாதபுரம் வழியாகவும் மற்றும் குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் செல்லலாம்.

Advertisement


மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக உக்கடம் வரும் இலகுரக வாகனங்கள் காமராஜபுரம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பொள்ளாச்சி ரோடு LIC Colony Junction வந்தடைந்து தக்காளி மார்கெட்டில் வலது புறம் திரும்பி சாரதா மில் ரோடு ரயில் கல்யாண மண்டபம் போத்தனூர் கடைவீதியை அடைந்து நஞ்சுண்டாபுரம்இராமநாதபுரம் வழியாகவும் மற்றும் குறிச்சி பிரிவு. ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் செல்லலாம்.

உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவில் இடது புறமாக திரும்பி போத்தனூர் சாலை, போத்தனூர் கடைவீத, ரயில் கல்யாணமண்டபம்செட்டிபாளையம் ரோடு, GD Tank ஈச்சனாரி சென்று பொள்ளாச்சி ரோட்டை வந்தடைந்து செல்ல வேண்டும் உக்கடத்திலிருந்து குனியமுத்தூர் வழியாக பாலக்காடு நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் உட்பட அனைத்து இலகுரக வாகனங்களும் உக்கடம் பெரிய ரவுண்டானாவில் திரும்பி பேரூர் பைபாஸ் சாலைவழியாக அசோக் நகர் ரவுண்டானா, சேத்துமா வாய்கால், புட்டுவிக்கி சாலை வழியாக ஆசிரம் பள்ளி சந்திப்பை அடைந்து கோவை புதூர் மற்றும் பாலக்காடு ரோடு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

பாலக்காடு சாலையிலிருந்து உக்கடம் நோக்கி வரும் வாகனங்கள் பாலக்காடு சாலையிலிருந்து உக்கடம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் உட்பட அனைத்து இலகுரக வாகனங்களும் பாலக்காடு ரோடு. கோவைப்புதூர் பிரிவில் இடது புறம் திருமபி கோவைப்புதூர, ஆசிரமம் பள்ளி சந்திப்பில் வலது புறம் திரும்பி புட்டுவிக்கி சாலை வழியாக சேத்துமா வாய்க்கால், அசோக்நகர் ரவுண்டானா மற்றும் சிவாலயா சந்திப்பை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்

இரயில் கல்யாண மண்டபம், சாரதாமில் ரோடு, சுந்தராபுரம்சங்கம விதி முதல் பெரியார் சிலை, குறிச்சி பிரிவு Y Junction பொங்காளியம்மன் கோவில் மற்றும் குறிச்சி பிரிவு ரவுண்டானா வரையிலான ஊர்வலப் பாதையில் 16.09.2026ம் தேதி காலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை எவ்வித இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் உட்பட எந்த வாகனமும் சாலையின் இரண்டு பக்கமும் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை.


குனியமுத்தூர், இடையர்பாளையம் சந்திப்பிலிருந்து வாகாப் பெட்ரோல் பங்க. சுண்ணாம்பு காளவாய் சந்திப்பு. குனியமுத்தூர் குளம் வரையிலான ஊர்வலப்பாதையில் எவ்வித இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனமும் சாலையின் இரண்டு பக்கமும் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை.

எனவே, மேற்கண்ட சாலைகளில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் காரணமாக போககுவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

12 ராசிகளுக்கும் நாளைய பலன் இதோ! சந்திராஷ்டமம் யாருக்கு?

செவ்வாய்க்கிழமைக்கான இன்றைய ராசிபலன். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்று வேலை, தொழில், பணம், குடும்பம், உடல்நலம் உள்ளிட்ட விஷயங்களில் பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

Video

தடாகத்தில் மீண்டும் வேட்டையன்- மக்கள் அச்சம்…

கோவை: தடாகம் நஞ்சுண்டாபுரம்மீண்டும் வலம் வந்த வேட்டையன்காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை செடி,...