கோவை: கோயமுத்தூர் மாவட்ட கார் டிரேடர்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கார் விற்பனையாளர்களின் பயன்படுத்தப்பட்ட கார்கள் இடம்பெறும் பிரம்மாண்டமான Used Car விற்பனை கண்காட்சி கோவையில் செப்டம்பர் 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஆறு நாட்கள் நடைபெற உள்ளது.
கோவை திருச்சி சாலையில் உள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில், 300-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
சிறிய ரக கார்கள் முதல் உயர்தர கார்கள் வரை பல்வேறு வகையான கார்கள் இடம்பெறுவதுடன், ரூ.50 ஆயிரம் முதல் பயன்படுத்தப்பட்ட கார்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கிக்கடன் வசதி

கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது விருப்பம் மற்றும் பட்ஜெட்டிற்கு ஏற்ற கார்களை ஒரே இடத்தில் நேரடியாக பார்வையிட்டு, பல்வேறு கார்களை ஒப்பிட்டு தேர்வு செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கார் வாங்க விரும்புவோர் மட்டுமின்றி, தங்களிடம் உள்ள பழைய காரை விற்பனை செய்ய விரும்புபவர்களும் இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்டு பயனடையலாம். பழைய காரை மாற்றிக் கொள்ளும் வசதி, தங்களது காரை கண்காட்சிக்கு கொண்டு வந்து நிறுத்தி விற்பனை செய்யும் ‘பார்க் அண்ட் செல்’ வசதி உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கார் வாங்கும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, வாகனங்களின் நம்பகத்தன்மை மற்றும் ஆவணங்கள் தொடர்பான பரிசோதனை, வங்கி கடன் வசதிக்கான உதவி, ஆவணப் பணிகளுக்கான உதவி உள்ளிட்ட சேவைகளும்,
குறிப்பாக தமிழகம் முழுவதும் இலவசமாக உரிமையாளர் பெயர் மாற்றம் செய்து வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்பட்ட காரை வாங்க அல்லது தங்களது பழைய காரை விற்பனை செய்ய விரும்பும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ,மேலும் விபரங்களுக்கு 7092920021 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.





