கோவையில் தயார் நிலை உணவுகள் தயாரிக்கும் பயிற்சி

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுப் பொருட்கள் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி வரும் அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

Advertisement

பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் மற்றும் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து இப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடைபெறும்.

இப்பயிற்சியில் தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், டோக்ளா மிக்ஸ், பிசிபேளாபாத் மிக்ஸ், கீர் மிக்ஸ், குலாப் ஜாமூன் மிக்ஸ், ஐஸ்கிரீம் மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ், சூப் மிக்ஸ் உள்ளிட்ட தயார்நிலை உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் முறைகள் கற்றுத்தரப்பட உள்ளன. இப்பயிற்சி பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோருக்குப் பயனளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

பயிற்சியில் பங்கேற்க ரூ.1,770 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதில் ரூ.1,500 பயிற்சிக் கட்டணமும், 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியும் (ஜிஎஸ்டி) அடங்கும். இத்தொகையைப் பயிற்சியின் முதல் நாளன்று செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி நடைபெறும் இடம், கோவை மருதமலை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில், 7-வது வாயில் வழியாகச் செல்லும் பகுதியில் உள்ளது. பயிற்சி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 94885 18268 என்ற கைப்பேசி எண்ணிலும், 0422-6611340 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

மேலும், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை – 641003 என்ற முகவரியிலும், phtc@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நாளை முதல் கோவையில் சொட்டு மருந்து முகாம்- விவரங்கள் இதோ…

கோவை: கோவை மாவட்டத்தில் நாளை முதல் வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. சுமார் 2.54 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 6 மாதங்கள் முதல் 5 வயது...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...