50 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய நிலம் பறிபோகும் அபாயம்? கோவையில் 96 குடும்பங்கள் தவிப்பு!

கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் வாங்கிய 9.54 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சி நடைபெறுவதாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கணேசன் குற்றம்சாட்டியுள்ளார். ஏழை மக்களின் நில உரிமையைப் பாதுகாக்க அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில், தெய்வீக நகர்மனை பகுதி மக்களுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கணேசன், சரவணம்பட்டி பகுதியில் உள்ள நிலம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விளக்கமளித்தார்.

Advertisement

அவர் கூறுகையில், சரவணம்பட்டி தெய்வீக நகர்மனை பகுதியில் கடந்த 1976-ஆம் ஆண்டு 96 பேர் இணைந்து 9.54 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர். ஒவ்வொருவரும் தலா 2 முதல் 5 சென்ட் வரை மனைகளை வாங்கியதாகவும், இந்த மனைப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிலம் கௌமார மடாலயத்திற்குச் சொந்தமானது எனக் கூறி, 96 நில உரிமையாளர்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், இந்த நிலத்தைக் கைப்பற்றி அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் ஐடி பார்க் அமைக்க முயற்சி நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார்.

Advertisement

தனியார் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த சிவராமன் மற்றும் இந்து அமைப்பில் இருப்பதாகக் கூறப்படும் சுரேஷ்பாபு ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் கணேசன் குற்றம்சாட்டினார். முன்னாள் மடாதிபதி சுந்தரசாமிக்குத் தனிப்பட்ட முறையில் சொந்தமாக இருந்த நிலத்தை அவரே விற்பனை செய்ததாகவும், தற்போது அந்த நிலம் தொடர்பாக உரிமை கோரப்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும், தற்போதைய கௌமார மடாலய மடாதிபதி குமரகுருபர சுவாமிக்கு பணத்தாசை காட்டி சிலர் செயல்பட வைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Advertisement

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் கேட்டபோது, மடாலயத்திற்கு வாக்குறுதி அளித்துவிட்டதாக அவர் தெரிவித்ததாகக் கணேசன் கூறினார். தற்போதைய அரசு மடாலயத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வாங்கிய 96 குடும்பங்களின் உரிமைகள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏழை மக்களிடமிருந்து நிலம் பறிக்கப்படுவதாகக் கூறப்படும் முயற்சியைத் தடுத்து அவர்களின் நில உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி கணேசன் கோரிக்கை விடுத்தார்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...