கோவை மாவட்டத்தில் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கோவை: தமிழ்நாடு அரசின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், முதிர்வுத் தொகை பெறத் தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்க வேண்டும். பெற்றோரில் ஒருவர் 49 வயதுக்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement

விண்ணப்பதாரர்கள் ஆண்டு வருமானச் சான்று (ரூ.1.20 லட்சத்திற்குள்), குடும்ப நல அறுவை சிகிச்சைக்கான அசல் சான்று, ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று, இருப்பிடச் சான்று உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000-ம் தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தின் மூலம் வைப்புநிதிப் பத்திரமாக வழங்கப்படுகிறது.

Advertisement

இத்தொகையைப் பெறும் பெண் குழந்தைகள் 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அல்லது தோல்வி குறித்த மதிப்பெண் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் வட்டியுடன் முதிர்வுத் தொகை வழங்கப்படும்.

கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் கண்டறிய முடியாத பயனாளிகளின் விவரங்கள் https://coimbatore.nic.in என்ற மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement

பயனாளிகள் தங்களது விவரங்களைச் சரிபார்த்து, வைப்புநிதிப் பத்திரம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன், கிராமப்புறங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், நகர்ப்புறங்களில் உள்ள மண்டல அலுவலகங்களிலும் செயல்படும் சமூக நலத்துறை அல்லது மகளிர் ஊர்நல அலுவலர்களை நேரில் அணுகி விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் தயார் நிலை உணவுகள் தயாரிக்கும் பயிற்சி

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுப் பொருட்கள் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி வரும் அக்டோபர் 28, 29 ஆகிய...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...