BREAKING NEWS: வால்பாறையில் கோர விபத்து; 9 பேர் பலி

கோவை: வால்பாறையில் சுற்றுலா வேன் விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கேரளாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளுடன் வந்த வேன், வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது.

13வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, வேன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியது.

அதன் பின்னர் அந்த வேன் பள்ளத்தில் உருண்டு 9வது கொண்டை ஊசி வளைவு அருகே விழுந்தது.

Advertisement

இந்த கோர விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 13 பேர் வந்திருந்த நிலையில், 4 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 3 பேர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் ஒரு பெண் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...