கோவைக்கு ரயிலில் வந்த விஜய் ஆண்டனி- மக்கள் கொடுத்த அறிவுரை…

கோவை: தான் தயாரித்த படத்தை பற்றி கேட்டறிய ரயில் வந்த விஜய் ஆண்டனி.

மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ராணி, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள அப்பா குட்டி திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் இயக்குனர் மாறன், விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் கோவை பிராட்வே சினிமாவில் பார்வையாளர்களை சந்தித்து படம் குறித்து கேட்டறிந்தனர் அப்பொழுது சில பெண்கள் கண்ணீர் விட்டு படத்தின் தாக்கங்களை விஜய் ஆண்டனியிடம் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஜய் ஆண்டனி படம் முடிந்து ஆனந்த கண்ணீருடன் பேசியது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். பிச்சைக்காரன் படம் அம்மாவிற்காக எடுத்தது பிச்சைக்காரன் படம் மிகப் பெரிய ஒரு காவியம் என்று குறிப்பிட்ட அவர் அதனை போல் ஒரு படத்தை எடுக்க முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் அதைப் போலவே மிகவும் இந்த படமும் நெருக்கமாக உள்ளது என்று பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

ஒரே வாரத்தில் அதிக திரைப்படங்கள் வெளியானதால் திரைகள் பெரிதளவு கிடைக்கவில்லை என்று கூறினார். இருப்பினும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிக திரைகளை தருமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். திரையரங்கு உரிமையாளர்கள் மனதை வைத்தால் பிச்சைக்காரன் படம் போல் இந்த படத்தையும் கொண்டு செல்ல முடியும் என்று கூறினார் மேலும் இது சமூகத்திற்கு தேவையான படம் என்றும் தெரிவித்தார்.

Advertisement

இந்த படத்தை பார்த்து விட்டு வரும் ஆணும் பெண்ணும் நிச்சயமாக அவரது தந்தைக்கு போன் செய்து பேசுவார்கள் என்று கூறினார். இந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்றும் தெரிவித்தார். எமோஷன் எல்லாம் எதுவும் இல்லை அது ஒரு பூமர் என்று தற்பொழுது பேசி வரும் நிலையில் அப்படி எல்லாம் இல்லை எமோஷன்கள் என்பது இப்பொழுதும் இருக்கிறது என்று கூறுவது தான் இந்த படம் என்றும் தெரிவித்தார். மேலும் இது போன்ற சிறிய படங்களை ஊக்குவியுங்கள் என்றும் சமூகத்திற்கு தேவையான படம் என்றும் தெரிவித்தார்.

வழக்கமாகவே இளம் ஆண்கள் பலரும் பொழுது அப்பாவிடம் இருந்து சற்று விலகுவார்கள் ஆனால் இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக போன் செய்தாவது பேசுவார்கள் நிச்சயமாக எமோஷன் பாண்டுங்கில் ஒரு ஐந்து சதவிகிதம் தாக்கத்தையாவது குடும்பத்திற்குள் உருவாக்கும் என்று தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு சஸ்பென்ஷன் ஆக்சன் படங்கள் என் மூலம் எதிர்பார்க்கலாம் என்றும் சுட்டிக்காட்டினார். இதை அடுத்து அயோத்தி திரைப்பட இயக்குனருடன் படம் நடித்துள்ளதாகவும் பிச்சைக்காரன் மூன்றாம் பாகம் வரும் என்றும் தெரிவித்தார்.

பணம் என்பது சம்பாதித்து விடலாம் ஆனால் அன்பு என்பது எளிதாக கிடைத்து விடாது என்று கூறிய அவர் மக்கள் என்னை ஆதரித்ததால்தான் விஜய் உடனடியாக இங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

இப்பொழுதெல்லாம் ஒரு வாரம் தான் கடமை ஓடுகிறது ஆனால் அப்பொழுதெல்லாம் சில்வர் ஜூப்ளி. என்பதனால் 100 நாள் எல்லாம் படம் ஓடி இருந்தது தற்பொழுது ஓடிடி தளங்கள் வந்துவிட்டதால் உடனடியாக முதலீடு செய்த பணத்தை எடுக்க வேண்டும் என்று உரிமையாளர்கள் தயாரிப்பாளர்கள் நினைப்பதாக தெரிவித்த அவர் இதனால் சிறிய படங்கள் பாதிக்கப்படுகிறது. என்றும் கூறினார்.

செஞ்சி சிறுமி அவதாரம் குறித்து பேசிய அவர் மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றும் அதனை யார் செய்தார் என்று தெரியவில்லை முதலில் அந்த குழந்தையை எங்கு வைத்துள்ளார்கள் முதலில் அந்த குழந்தை உள்ளதா இல்லையா என்று எதுவும் தெரியவில்லை இது இன்று நேற்று நடந்த விஷயம் அல்ல காலம் காலமாக சிறு குழந்தைகளுக்கு இதை நடந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்ட அவர் முதலில் அனைவரும் மனிதர்களாக மாற வேண்டும் மற்றவர்கள் மாற்ற முடியாது தானாக திருந்த வேண்டும் என்று கூறினார்.

நீண்ட நாட்கள் கழித்து ரயில் பயணம் மேற்கொண்டு மக்களிடம் பேசி வந்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது மிகவும் வித்தியாசமாக இருந்தது என்று தெரிவித்த அவர் ரயில் பயணத்தில் சக பயணிகள் என்னை பாட்டு பாட சொன்னார்கள் அவர்களுக்காக பாட்டு பாடினேன் படத்தை பற்றி பேசிக் கொண்டே இருந்தோம் என்று தெரிவித்தார்.

தற்பொழுது இந்தியா அளவில் மிகப்பெரிய படங்கள் பேன் இந்தியா படங்களாக வருவது மிகப்பெரிய மகிழ்ச்சியை அழைக்கிறது என்று தெரிவித்த அவர் முதலில் எல்லாம் இங்கிலீஷ் படங்கள் தான் வரும் ஆனால் தற்பொழுது இந்திய படங்களை உலக அளவிற்கு தரம் உயர்த்தி ரிலீஸ் செய்வது எல்லாம் மகிழ்ச்சி அளிக்கிறது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.

பெரியவர்கள் பெரிய படங்களாக இருக்கிறார்கள் அது நன்றாக இருக்கலாம் நன்றாக சிறிய தயாரிப்பாளர்கள் சிறிய பட்ஜெட்டில் படம் எடுக்கிறார்கள் அதுவும் நன்றாக இருக்கும் நன்றாக எல்லாம் பலம் போகலாம் என்று கூறிய அவர் பைவ் ஸ்டார் ஹோட்டல் உணவு கையேந்தி பவன் உணவை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்தார்.

ஆறு மணி காட்சிக்கு பலரும் கண்டன விமர்சனங்கள் தெரிவித்து வருவது தொடர்பான கேள்விக்கு ஆறு மணிக்கு காட்சி தேவைப்படுபவர்கள் வந்து பார்ப்பார்கள் அதனால் ஒரு குற்றம் நடக்கிறது என்றெல்லாம் இல்லை என்று தெரிவித்தார். மேலும் மக்களை அதிக விஷயங்களை கட்டுப்படுத்த வேண்டாம் சுய ஒழுக்கத்தை கற்று கொடுத்து என்ன வேண்டுமோ அவர்களே தேர்ந்தெடுக்கலாம் சுதந்திரம் கொடுக்கலாம் என்று கூறினார். அதிகாலை சினிமாவிற்கு சென்றால் கேட்டு விடுவீர்கள் என்று சொல்ல தான் முடியும் ஆனால் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது என்று தெரிவித்தார்.

தொடர்ச்சியாக நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பான கேள்விக்கு இது அன்றிலிருந்து இருக்கிறது என்றும் எடுத்துக்காட்டாக ரஜினி கூட அந்த காலத்திலிருந்து செய்து கொண்டு தான் இருந்தார் அது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்தார். மக்களுடன் கனெக்ட் ஆவதற்கு நடிகர்கள் விரும்புகிறார்கள் அதற்காக மன்றங்கள் என்பது தேவைப்படுகிறது என்று கூறினார். நடிகர்கள் எப்பொழுது அரசியல் என்று அறிவிக்கிறார்களோ அப்பொழுது அதைப் பற்றி பேசிக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

தெலுங்கு படங்களில் கதாநாயகன் கையை வைத்து ரயிலை நிறுத்துவது விமானத்தில் தொங்கி செல்வது போன்ற காட்சிகள் எல்லாம் இடம்பெறுவது தொடர்பான கேள்விக்கு ஆங்கிலத்தை படங்களான ஸ்பைடர் மேன் சூப்பர்மேன் பேட்மேன் உள்ளிட்ட படங்கள் எல்லாம் நாம் பார்த்திருப்போம் அந்த அளவிற்கு பொருட்ச அளவு செய்து இங்கே எடுக்க முடியாது என்பதால் இங்குள்ள சாதாரண ஹீரோக்களை அதனை செய்து விடுகிறார்கள் என்று தெரிவித்தார்.

சண்டியர் என்ற பெயரில் ஏற்கனவே ஒரு படம் வந்தது என்று நினைவில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் அந்தப் பெயர் விவகாரம் குறித்து பிரச்சனை இருக்கின்ற பட்சத்தில் எதனால் அவர்களுக்கு அந்த பிரச்சினை உள்ளது என்று அவர்களிடம் கேட்டு அறியலாம் அதில் சில உண்மைகளும் இருக்கலாம் அதை எல்லாம் ஆராய்ந்து ஒரு முடிவை நாம் எடுக்கலாம் என்று தெரிவித்தார் என்னுடைய பார்வையில் அவர்களது கருத்துக்களில் ஒரு 20 சதவிகிதம் உண்மையாக கூட இருக்கலாம் என்று கூறினார்.

படங்களுக்கு பெயர் வைக்கும் பொழுது ஒரு பெயரே பல்வேறு மொழிகளுக்கும் தகுந்தாற்போல் இருந்தால் வியாபார ரீதியாக அவ்வாறு பெயர் வைக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

தமிழக அரசின் இந்த ஆறு மாத ஆட்சியை ஒரு பொது மக்களாக எவ்வாறு பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு இதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்களோ அதுதான் செய்கிறார்கள் நல்லது செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் நாட்டை நடத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல வீட்டை நடத்துவது பெரிய விஷயம் அப்படி இருக்கும் பொழுது 7 கோடி மக்கள் பல்வேறு ஜாதிகள் பல்வேறு மதங்கள் பல்வேறு இனங்களை ஒரே மாதிரி கொண்டு செல்வது மிகவும் கடினம் எனவே எந்த ஆட்சி வந்தாலும் சரி இந்த ஆட்சி இதற்கு முந்தைய ஆட்சி என்று எந்த ஆட்சி இருந்தாலும் இது மக்கள் ஆட்சி தான் அரசியல்வாதியால் எதையும் மாற்றிவிட முடியாது அரசியல்வாதிகள் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் மேற்பார்வை பார்க்கலாம் தவிர மக்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பது முக்கியம் என்று குறிப்பிட்டார்.

ஒரு குடும்பஸ்தனாக வீட்டை நடத்துவதே கஷ்டம் அப்படி இருக்கும் பொழுது அரசிடம் பெரிதளவு விஷயங்களை நான் எதிர்பார்ப்பது இல்லை என்று தெரிவித்தார். பெருவாரியான மக்கள் மாற்றம் வந்ததாக என்னிடம் சொல்லி இருக்கிறார்கள் லஞ்சம் உள்ளிட்ட விஷயங்கள் குறைந்துள்ளதாக கூறியிருக்கிறார்கள் நான் இன்னும் அதனை அனுபவிக்கவில்லை பார்த்துவிட்டு சொல்கிறேன் என்று தெரிவித்தார்.

முன்னதாக இந்த நிகழ்விற்கு வருகை புரிந்த விஜய் ஆண்டனி ரயில் மூலம் கோவைக்கு வந்தடைந்தார் கோவை விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரயிலில் சக பயணிகளுடன் பயணியாய் அமர்ந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...