Breaking: யாரெல்லாம் விஜய் அமைச்சரவையில் இடம்பெறுகிறார்கள்? வெளியான முக்கிய தகவல்!

சென்னை: தமிழக முதலமைச்சராக இன்று விஜய் பொறுப்பேற்க உள்ள நிலையில், அவருடன் அமைச்சரவையில் இடம்பெறுவோர் யார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.

சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக அமோக வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக ஆதரவுடன் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.

இன்று காலை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்கிறார். வரும் 13ம் தேதி சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.

இதனிடையே இன்று விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் பதவியேற்க உள்ளனர். அவர்களது பட்டியல் வெளியாகியுள்ளது.

Advertisement

அதன்படி, ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ராமன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் இன்று பதவியேற்கின்றனர்.

Vijay Cabinet

இவர்கள் விஜய்யின் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் யாருக்கு எந்தத் துறை ஒதுக்கப்படுகிறது என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

இதனிடையே விஜய் கருப்பு-வெள்ளை உடையில் பதவியேற்பு விழா நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

இரண்டு நாட்களில் ஸ்டிரைக்…! கோவை மருந்து வணிகர்கள் சங்கம் அறிவிப்பு..!

கோவை மருந்து வணிகர்கள் சங்கம் GSR 220 விதிமுறைக்கு எதிராக மே 20 நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது, ஆன்லைன் விற்பனை தடை கோரிக்கை வைக்கப்பட்டது உள்ளது

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.