கொளத்தூர் மக்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த MLA V.S. பாபு மறைவு – கனிமொழி சந்தோஷ் MLA ஆழ்ந்த இரங்கல்!


சென்னை: கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு மறைவுக்கு கவுண்டம்பாளையம் எம்எல்ஏ டாக்டர் கனிமொழி சந்தோஷ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு கொளத்தூர் மக்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு எனத் தனது இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய அண்ணன் திரு. V.S. பாபு அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய அண்ணன் திரு. V.S. பாபு அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் மக்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த அவரது மறைவு, அத்தொகுதி மக்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

Advertisement

மக்களுடன் நெருக்கமாகப் பழகி, அவர்களின் நலனிலும் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டிருந்த அவரது நினைவுகளும், மக்கள் நலன் சார்ந்த பணிகளும் என்றும் போற்றப்படும்.

அவர் இன்று நம்முடன் இல்லை என்றாலும், அவர் விட்டுச் சென்ற மக்கள் நலப் பணிகளையும், மக்களின் முன்னேற்றத்திற்காக அவர் கொண்டிருந்த கனவுகளையும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். அதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

டாக்டர் கனிமொழி சந்தோஷ், MLA
கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...