கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு – போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…

கோவை: கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கோவை கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், சுத்தம், சுகாதாரம் மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வுப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. நேரு நகர், விரியம்பாளையம், வடவள்ளி வடக்கு, வடவள்ளி தெற்கு உள்ளிட்ட மாநகராட்சிப் பள்ளிகளில் பாலின நிபுணர்கள் மூலம் இப்பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதில், முறையாக சோப்பு பயன்படுத்தி கைகளைக் கழுவும் முறைகள், நல்ல தொடுதல் மற்றும் தவறான தொடுதல் (Good Touch / Bad Touch), பருவமடைதல் மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான மாற்றங்களை எதிர்கொள்வது குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேலும், மாணவர்களின் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கப்பட்டதுடன், பயிற்சிக்குப் பிறகு அவர்களின் புரிதலை மதிப்பிடும் வகையில் தேர்வும் நடத்தப்பட்டது.

Advertisement

இதன் ஒரு பகுதியாக, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் 100 மாணவர்கள், 100 மாணவியர்கள் என மொத்தம் 200 பேருக்கு மழைநீர் சேகரிப்பு மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குத் தனித்தனியாக சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

நீர்சேமிப்பு மற்றும் சுகாதாரத்தின் அவசியத்தை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகள் மூலம் சுமார் 440 மாணவ, மாணவியர்கள் பயனடைந்தனர்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...