சூலூரில் 132 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்…

கோவை: கோவை சூலூரில் 132 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், சுல்தான்பேட்டை ஸ்ரீ பாலாஜி மஹாலில், இன்று வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பிஸ் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 132 பயனாளிகளுக்கு ரூ.77.58 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட தவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் வழங்கினார்.

இம்முகாமில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் என்.எம்.சுகுமார், வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) மாருதிபிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்கள் தொடர்பு முகாம் மூலம் ஒவ்வொரு வட்டத்தில் உள்ள கிராமத்தை தேர்வு செய்துஅந்த ஊரில் என்னென்ன தேவைகள் என்பது குறித்து மனுக்களாக பெற்று, அதனடிப்படையில் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட வேண்டும் என அறிவுறுத்தியதை தொடர்ந்து, இன்று, சூலூர் வட்டத்தில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

Advertisement

இம்முகாமில் 10-க்கும் மேற்பட்ட துறைகள் மூலம் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இப்பகுதியில் நடைபெற்ற கள ஆய்வின்போது இங்குள்ள நியாய விலைக்கடை அங்கன்வாடி, அரசுப் பள்ளிகள் உள்ளிட்டவை ஆய்வில் எடுத்து கொள்ளப்பட்டன.

அதுமட்டுமல்லாமல் இங்குள்ள சாலை வசதிகள், பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு, மதிய உணவுகளின் தரம் குறித்தும், அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், அங்கன்வாடிகளில் பயிலும் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க முடிவெடுக்கும் போது. அரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் முன்வரவேண்டும்.

Advertisement

அந்த வகையில் இப்பகுதியில் 5 குழந்தைகள் அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர். தற்போது தென்மேற்கு பருவமழை காலம் என்பதால்வீடுகள், வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஒவ்வொரு மாணாக்கர்களும் கண்டிப்பாக உயர்கல்வி சேர்ந்து படிக்க வேண்டும். அது அவர்களது எதிர்காலத்திற்கு மிகவும் நல்லது.

கல்லூரிகள், பாலிடெக்னிக், ஐடிஐ உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் ள்ளன. நமது மாவட்டத்தில் 180 மேற்பட்ட கல்லூரிகள் உள்ளதுஅதில் பல்வேறு வகையான பாடப்பிரிவுகளும் உள்ளது. அரசு பல்வேறு நிதியுதவியும் வழங்கி வருகிறது. எனவே, எந்தவொரு மாணவரும் பள்ளிப்படிப்போடு நின்று விடாமல் உயர்கல்வி பயில வேண்டும்.

இம்முகாமிற்கு ஏற்கனவே மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் 132 பயனாளிகளுக்கு ரூ.77.58 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெற்ற இம்முகாமில் பொதுமக்களால் வழங்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் பொதுமக்களாகிய நீங்கள் அரசு திட்டங்கள் குறித்து அறிந்து கொண்டு, அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...