ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

கோவை – அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச் சற்று முன்பாக ஓடும் காரின் ‘சன்ரூஃப்’ (Sunroof) டாப் வழியாக வெளியே வந்து, 4 இளம்பெண்கள் ஆபத்தான முறையில் அமர்ந்து பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகரின் முக்கியப் பிரதான சாலையான அவிநாசி சாலையில், அண்மையில் திறந்து வைக்கப்பட்ட ஜி.டி மேம்பாலத்தில் நாள்தோறும் நள்ளிரவு நேரங்களிலும் வாகனங்கள் அதிவேகத்தில் கடந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில்,இரவு நேரத்தில் அந்த மேம்பாலத்தில் அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் ஒன்றின் மேல்புற ஜன்னல் (Sunroof) முழுமையாகத் திறந்து வைக்கப்பட்டு இருந்தது.

Advertisement

​அப்போது, காரின் உள்ளே இருந்த 4 இளம்பெண்கள், தங்களது உயிரைப் பற்றிக் கவலையின்றி, காரின் மேலே உள்ள டாப் வழியாக வெளியே வந்து அதன் மீது ஆபத்தான முறையில் அமர்ந்து கொண்டு, காற்றில் கைகளை அசைத்தபடி பெரும் கூச்சலிட்டுப் பயணித்து உள்ளனர்.

​கார் மேம்பாலத்தின் வளைவுகளில் வேகத்தில் திரும்பிய போதும், அந்தப் பெண்கள் எவ்விதப் பயமும் இன்றி சன்ரூஃபில் அமர்ந்தபடி சென்று உள்ளனர்.

Advertisement

எதிர்பாராதவிதமாக ஓட்டுநர் திடீர் பிரேக் அடித்து இருந்தாலோ அல்லது கார் நிலைதடுமாறி இருந்தாலோ, நாலு பேரும் மேம்பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டுப் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் நிலவியது.

​இவர்களின் இந்த விபரீத விளையாட்டைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர், தங்களது மொபைல் போனில் இதனை வீடியோவாகப் பதிவு செய்து,

“கோவையில் நள்ளிரவில் அரங்கேறும் ஆபத்தான சாகசம்” என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் கோவையின் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வேகத்தில் பரவி, பொதுமக்கள் மத்தியில் கடுமையான கண்டனங்களை எழுந்து வருகிறது

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...