கோவை: தற்கொலைக எண்ணத்துடன் கோவை குளக்கரையில் சுற்றித்திரிந்த முதாட்டியை மீட்ட பிங்க் பேட்ரோல் போலீசார் அவரை காப்பகத்தில் ஒப்படைத்து ஆலோசனை வழங்கிய நிலையில், தற்போது மூதாட்டி குடும்பத்தினரிடம் இணைந்துள்ளார்.
வெரைட்டி ஹால் போலீஸ் எஸ்ஐ உமா மற்றும் பிங்க் பேட்ரோல் போலீசார் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி பெரியகுளம் ஐ லவ் கோவை அருகே ரோந்து சென்றனர்.
போலீசார் அங்கு கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, மூதாட்டி ஒருவர் குளம் அருகே அமர்ந்திருந்ததைப் பார்த்தனர்.
கோவையில் விபசாரம்; இரண்டு புரோக்கர்கள் கைது!
அவரிடம் போலீசார் விசாரித்த போது அவர் தனது பெயர் மாராத்தாள் (83) என்றும், தற்கொலை செய்து கொள்ள வந்ததாகவும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மீட்டு ஆர்எஸ் புரம் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு மலரும் விழிகள் சட்ட ஆலோசகர் மதிவாணன், காப்பக பராமரிப்பாளர் கங்காதரன் மற்றும் கருப்பையா ஆகியோர் மூலம் மூதாட்டிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.
கோவை மேம்பாலத்தில் திருமண போட்டோ சூட்- வலுக்கும் புகார்கள்…
இதை தொடர்ந்து 6 மாதம் கழித்து காப்பக செவிலியர்கள் தனம், எலிசபெத் இருவரும் காளப்பட்டியில் உள்ள மூதாட்டி மாராத்தாள் வீட்டிற்கு அழைத்து சென்று குடும்பத்தோடு ஒப்படைத்தனர்.





